அதிரடி சரவெடி... தமிழக பட்ஜெட்டில் ரூபாய்க்கான லட்சிணை மாற்றம் !

 
தமிழக பட்ஜெட்

 
தமிழகத்தில் நாளை  சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 – 2026-தாக்கல் செய்யப்பட உள்ளது. முதல்வர்  தலைமையில் நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.  தற்போது ஆளும் திமுக அரசு தாக்கல் செய்யும் கடைசி முழு பட்ஜெட் இதுவாகும்.  2026  தேர்தல்காலம் என்பதால்  அப்போது இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும்.

தமிழக பட்ஜெட்
நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் இன்று தமிழக அரசு பொருளாதார ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. நடப்பு நிதியாண்டில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8%ஆக இருக்கும் என கணித்துள்ளது.  தனிநபர் ஆண்டு வருமானம் 2.78 லட்சமாக அதிகரித்துள்ளது. இது தேசிய சராசரியைவிட 1.64 மடங்கு அதிகம் என குறிப்பிடப்பட்டுள்ளன.  


இந்த வழக்கமான தகவலை அடுத்து தற்போது மிக முக்கிய அப்டேட் ஒன்று இந்த பட்ஜெட்டில் நிகழ்ந்துள்ளது. இந்திய ரூபாயின் இலச்சினை  அடையாளப்படுத்தப்பட்டதில் இருந்து அதனை தான் தமிழக அரசு பட்ஜெட்டில் ரூபாய் மதிப்பீட்டை குறிப்பிடுகையில் குறிப்பிட்டு வருகிறது.

தமிழக பட்ஜெட்

ஆனால், இந்த முறை   பதிலாக தமிழ் எழுத்தான ரூ என்பதை ரூபாயின் அடையாள இலச்சினையாக பயன்படுத்தியுள்ளது.  இந்த மாற்றம் தேசிய அளவில் மிக முக்கியத்துவம் ஒன்றாக கருதப்படுகிறது.  
ஏற்கனவே, தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கையை திணிக்க மத்திய பாஜக அரசு முயற்சி செய்வதை  பெரும்பாலான அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நேரத்தில்   தமிழக அரசின் இந்த ரூ அடையாள மாற்றம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web