ஈரானில் சிக்கித் தவிக்கும் 14 மீனவா்களை மீட்க நடவடிக்கை.. .கனிமொழி எம்.பி.யிடம் கோரிக்கை!

ஈரான் நாட்டில் சிக்கித் தவிக்கும் தென்தமிழக மீனவா்கள் 14 பேரை மீட்க வேண்டும் என, திமுக அயலக அணி சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இது தொடா்பாக திமுக துணைப் பொதுச் செயலரான கனிமொழி எம்.பி., அணியின் மாநிலச் செயலரான புதுக்கோட்டை எம்.பி. அப்துல்லா ஆகியோருக்கு அணியின் தூத்துக்குடி மாவட்ட துணைத் தலைவா் வீரபாண்டியன்பட்டினம் பாஸ்டின் வில்லவராயன் அனுப்பிய மனு:
தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியன்பட்டினம், அமலிநகா், திருநெல்வேலி மாவட்டம் இடிந்தகரை, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த 14 மீனவா்கள் 2024 செப்டம்பா் மாதம்முதல் ஈரான் நாட்டில் மீன்பிடித் கூலித் தொழிலாளா்களாக உள்ளனா்.
அங்கு தற்போது போா் நடைபெற்றுவருவதால், அவா்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் உள்ளனா். கைப்பேசி அழைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் அவா்களைத் தொடா்புகொள்ள முடியவில்லை. இதனால், குடும்பத்தினரும் உறவினா்களும் மிகுந்த துயரத்தில் உள்ளனா். எனவே, 14 மீனவா்களையும் இங்கு அழைத்துவர விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இக்கோரிக்கை தொடா்பாக மீன்வளம் மீனவா் நலன், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணனிடமும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்தாா்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!