நடிகர் அஜித் கார் பந்தயத்தில் பழைய ரெக்கார்டை முறியடித்து புதிய சாதனை!

தமிழ் திரையுலகில் தல ஆக கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் அஜீத். இவர் கார் பந்தயத்தில் மிகுந்த ஆர்வம் மிக்கவராக திகழ்கிறார். இதனையடுத்து கார் ரேஸில் கலந்துகொண்டு சாதனைகளை படைத்து வருகிறார். அந்த வகையில் நடிகர் அஜீத் பார்சிலோனாவில் நடைபெற்ற கார் பந்தயத்தில் தனது பழைய ரெக்கார்டை பிரேக் செய்துள்ளதாக அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தரப்பிலிருந்து வீடியோ பகிரப்பட்டுள்ளது.
இதற்கு முன்பாக 1.51 நிமிடங்களில் ஒரு சுற்றை முடித்திருந்ததே நடிகர் அஜித்குமாரின் பழைய சாதனையாக இருந்து வந்தது இந்நிலையில் 1.47 நிமிடங்களில் ஒரு லேப்பை முடித்து இருப்பது அவருடைய புதிய சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் கைதேர்ந்த கார் பந்தயக்காரர்களின் ரெக்கார்டிற்கும் அஜித்குமாரின் ரெக்கார்டிற்கும் 4 நொடிகள் மட்டுமே வித்தியாசம் இருப்பதாக அவர்கள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த லேப்பில் அஜித் 270 கிலோ மீட்டர் வேகத்தில் காரை இயக்கிய வீடியோ தற்போது வெளியாகி பெரும் வைரலாகியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!