”தல” ஆவேசம்... ரசிகரின் போனை பிடுங்கி வீடியோவை டெலிட் செய்த நடிகர் அஜீத்... . வீடியோ வைரல்..!!

 
நடிகர் அஜித்

ரசிகரின் செல்போனை பிடுங்கி நடிகர் அஜித் தனது வீடியோவை நீக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்றது. அதன் பிறகு இரண்டாம் கட்ட படப்பிடிப்பை துபாயில் நடத்தினார்கள். இந்நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக அஜித் குடும்பத்தினர் கடந்த வாரம் துபாய் சென்றனர். அஜித் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் படகில் செல்லும் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.


இதையடுத்து நடிகர் அஜித் துபாயில் பெண் ரசிகை ஒருவருடன் புத்தாண்டு பார்ட்டியில் கலந்து கொண்ட வீடியோ இணையத்தில் வெளியாகி தீயாக பரவியது. இப்படியாக அஜித் எங்கு சென்றாலும் அவரை வீடியோ எடுத்து பதிவிடுவது தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள வீடியோ ஒன்று அஜித் ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

காதுகள் பத்திரம் - நடிகர் அஜித் அறிவுரை- Dinamani

ஏனெனில் அந்த வீடியோவில் நடிகர் அஜித் தன்னை வீடியோ எடுத்த ரசிகரின் போனை எடுத்து அந்த வீடியோவை டெலிட் செய்து ரசிகரிடம் திருப்பி கொடுத்துள்ளார். அஜித்தின் இந்த செயலால் அஜித் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்த சம்பவத்தை அருகில் இருந்த மற்றொரு ரசிகர் வீடியோ எடுத்துள்ளார். நடிகர் அஜித் ரசிகர்களிடம் இப்படி கோபமாக நடந்து கொள்வது இது முதல் முறையல்ல, இதற்கு முன் 2021ல் நடந்த சட்டசபை தேர்தலில் வாக்களிக்க வந்த நடிகர் அஜித்துடன் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகர், செல்போனை பறித்து எச்சரித்துள்ளார்.இதைப்போன்ற மற்றொரு சம்பவம் தற்போது துபாயில் நடந்துள்ளது.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web