நடிகர் அஜித் ரேஸிங் அணியின் கார் தீப்பிடித்து பரபரப்பு... அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வீரர்!
சர்வதேச அளவில் புகழ்பெற்ற துபாய் 24 மணி நேர கார் பந்தயத்தில் (24H Dubai 2025/2026), நடிகர் அஜித்குமார் தலைமையிலான 'அஜித்குமார் ரேஸிங்' அணி பங்கேற்று வருகிறது. இந்நிலையில் இன்று நடைபெற்ற போட்டியின் போது அந்த அணியின் கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
அஜித்குமார் ரேஸிங் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான அயர்டன் ரெடான்ட் (Ayrton Redant) காரைச் செலுத்திக் கொண்டிருந்த போது இந்த விபத்து நேர்ந்துள்ளது. காரின் எஞ்சின் பகுதியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் திடீரெனத் தீப்பிடித்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீப்பிடித்த உடனே காரை நிறுத்திய அயர்டன் ரெடான்ட், துரிதமாகச் செயல்பட்டுக் காரிலிருந்து வெளியேறினார். இதனால் அவர் எவ்விதக் காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தீ விபத்தினால் கார் பலத்த சேதமடைந்துள்ளது. இதனால் அந்தப் பிரிவில் அஜித்தின் அணியின் முன்னேற்றம் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
