நடிகர், இயக்குநர் சசிகுமார் சிறுவாபுரி முருகன் கோவிலில் சாமி தரிசனம்!

 
சசிகுமார்
 


இயக்குநர் சசிகுமார் அயோத்தி, கருடன், நந்தன்'  வெற்றிப்படங்களை அடுத்து  தற்போது நடித்துள்ள படம் 'டூரிஸ்ட் பேமலி'. இந்த படத்தை 'குட் நைட்' படத்தினை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. 

டூரிஸ்ட் பேமிலி
அபிஷன் ஜீவிந்த் இயக்கும் இந்தப் படத்தில் சிம்ரன் கதாநாயகியாக நடித்துள்ளார். யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

டூரிஸ்ட் பேமிலி

இந்நிலையில், நடிகர் சசிகுமார் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சிறுவாபுரி முருகன் கோவிலில் 'டூரிஸ்ட் பேமிலி' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற வேண்டும் என்பதற்காக சாமி தரிசனம் செய்துள்ளார். சாமி தரிசனம் செய்து முடித்துவிட்டு  வெளியே வந்ததும் அவருடன் கோவிலுக்கு வந்த பக்தர்கள்  செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web