நடிகர் தர்ஷன் மற்றும் சகோதரர் கைது... திரையுலகில் பெரும் பரபரப்பு!

 
தர்ஷன்

 நடிகர் தர்ஷன் கார் பார்க்கிங் விவகாரத்தில் நீதிபதியின் மகனை தாக்கியதாக  கைது செய்யப்பட்டுள்ளார். உயர்நீதிமன்ற நீதிபதியின் மகன் ஆதிசுடி, சென்னையில் பிக் பாஸ் புகழ் தர்ஷன் குடியிருக்கும் வீட்டின் அருகே காரை பார்க் செய்துவிட்டு டீ குடிக்க சென்ற போது காரை எடுக்க சொல்லி தர்ஷன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் அப்போது தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார். ஒரு பெண் மற்றும் நீதிபதியின் மகனை தாக்கியதாக ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

கைது

பாதிக்கப்பட்ட ஆதிசுடி, மகேஸ்வரி இருவரும் அண்ணா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனிடையே நீதிபதியின் மகன் தங்களை தகாத வார்த்தைகளால் திட்டி தன்னையும், தம்பியையும் தாக்கியதாக பிக் பாஸ் புகழ் தர்ஷன் தரப்பிலும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

போலீஸ்

தங்களை தாக்கிவிட்டு மருத்துவமனையில் படுத்து நாடகமாடுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இருதரப்பு புகார்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கார் பார்க்கிங் விவகாரத்தில் நீதிபதியின் மகனை தாக்கியதாக நடிகர் தர்ஷன் மற்றும் அவரது சகோதரர் கைது செய்யப்பட்டு இருப்பது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  . 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web