நடிகர் தர்ஷன் சிறையில் குளிரால் அவதி... போர்வை வழங்க நீதிபதி உடனடி உத்தரவு!
சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன், அவரது தோழி மற்றும் நடிகையான பவித்ரா கவுடா உள்பட 17 பேர் ஆனேக்கல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தற்போது பெங்களூரு மற்றும் மாநிலம் முழுவதும் கடுமையான குளிர் நிலவுவதால், தர்ஷன் இரவில் தூங்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார். சிறை வழங்கிய ஒரே போர்வையை அவர் பயன்படுத்த முடியாமல் இருப்பதால் கூடுதல் போர்வை வழங்குமாறு அவர் முறையிட்டார்.
இதற்கிடையே, வழக்கு விசாரணைக்கு பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டில் அனைத்து கைதிகளும் காணொலி மூலம் ஆஜராகினர். தர்ஷன் குளிர் நிலை குறித்த முறையிடும்போது நீதிபதி சிறைத்துறை அதிகாரிகள் மீது கடும் அதிருப்தியை தெரிவித்து உடனடியாக கூடுதல் போர்வை வழங்க உத்தரவிட்டார்.

அதன் பின், அரசு தரப்பு வக்கீல் குற்றவியல் நடைமுறை சட்ட பிரிவு 264 கீழ் சில ஆவணங்களை பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். தர்ஷன் தரப்பு வக்கீல் அதற்காக ஆட்சேபனை தெரிவித்திருந்தாலும், நீதிபதி வழக்கு விசாரணையை அடுத்த மாதம் டிசம்பர் 3-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
