இன்று காலை 11 மணிக்கு நடிகர் டெல்லி கணேஷ் இறுதிசடங்குகள்... திரையுலகமே திரண்டு அஞ்சலி!

 
டெல்லி கணேஷ்
தமிழ் திரையுலகில் மூத்த நடிகர் டெல்லி கணேஷ் நேற்று முன் தினம் இரவு 11 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 80. வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று முன் தினம் இரவு 11 மணியளவில் உறக்கத்திலேயே அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவரது  உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. டெல்லி கணேஷின் மறைவிற்கு திரைத்துறையை சேர்ந்த பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  

 டெல்லி கணேஷ்

உறவினர்கள் வரவேண்டியிருப்பதாலும், பொதுமக்கள், திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தி வந்த நிலையில், இன்று காலை 11 மணிக்கு அவரது இறுதிசடங்குகள் நடைபெற உள்ளது.

மேடை நாடக நடிகராக அறிமுகமாக தமிழ் திரையுலகில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் டெல்லி கணேஷ் தனிமுத்திரை பதித்துள்ளார். டெல்லி கணேஷ் சிறந்த டப்பிங் கலைஞராகவும் விளங்கினார்.  தூத்துக்குடியில் பிறந்த இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 

டெல்லி கணேஷ்

இவர் தமிழில் நாயகன், அபூர்வ சகோதரர்கள், சங்கமம், அவ்வை சண்முகி, இந்தியன் 2 உட்பட 400க்கும் மேற்பட்ட படங்களில்  நகைச்சுவை, குணச்சித்திரம் என பல கதாபாத்திரங்களில் திறம்பட நடித்தவர்.  கலைமாமணி விருது உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web