நடிகர் தனுஷ் நெல்லையப்பர் கோவிலில் சாமி தரிசனம்.. மனமுருகி பிரார்த்தனை!
திரைப்படப் பணிகள் காரணமாக திருநெல்வேலிக்கு வந்த நடிகர் தனுஷ், இன்று (டிசம்பர் 10) அதிகாலையில் திருநெல்வேலியில் உள்ள பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.
நடிகர் தனுஷ் தற்போது, 'போர் தொழில்' படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இது தனுஷின் 54-வது படமாக உருவாகி வருகிறது.

இந்தப் படத்தில் நடிகை பூஜா ஹெக்டே, நடிகர்கள் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் ஜெயராம் ஆகியோரும் நடிப்பதாகத் தெரிகிறது. இந்தப் படப்பிடிப்பு அல்லது அது தொடர்பான பணிகளுக்காகவே தனுஷ் இன்று திருநெல்வேலிக்கு வந்துள்ளார்.

கோவிலுக்குள் சென்ற நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் விக்னேஷ் ராஜா ஆகியோர், பக்திப் பரவசத்துடன் நெல்லையப்பர் மற்றும் காந்திமதி அம்மனைத் தரிசனம் செய்தனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
