பிரபல நடிகர் குண்டு கல்யாணத்தின் சகோதரர் காலமானார்..!

சமீபத்தில் குடும்பம் மிக வறுமையில் இருப்பதாக எம்.ஜி.ஆரின் உதவியாளர் மகாலிங்கம் யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் யாரும் உதவி செய்யவில்லை என வருத்தம் தெரிவித்து இருந்தார். இப்போது உடல்நலக்குறைவால் காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது மகாலிங்கத்தின் உடல் இறுதி அஞ்சலிக்காக ஆர்ஏ புரத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
காலமான மகாலிங்கம் எம்ஜிஆரிடம் 1972 முதல் அவரது மறைவு வரையிலான 1987ம் ஆண்டு வரை நேர்முக உதவியாளராக பணிபுரிந்து வந்தார். மகாலிங்கத்தின் தந்தை பெயர் குண்டு கருப்பையா. இவர் எம்ஜிஆர் உடன் சேர்ந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் குண்டு கருப்பையாவின் மூத்த மகன் மகாலிங்கம். இவரது தம்பி நடிகர் குண்டு கல்யாணம்.
இன்னொரு சகோதரரின் பெயர் சாமிநாதன். இவர் அதிமுக தலைமை கழகத்தின் கேஷியராக பணிபுரிந்தவர். மகாலிங்கத்தின் குடும்பத்தினர் எம்ஜிஆர் உடன் மிகவும் நெருக்கமாகவாக இருந்தனர். தந்தை குண்டு கருப்பையா மறைந்த பிறகு மகாலிங்கத்தை தனது நேர்முக உதவியாளராக எம்ஜிஆர் சேர்த்து கொண்டார். திமுகவில் இருந்து அவரை நீக்கியபோது அவர் சத்யா ஸ்டூடியாவில் படப்பிடிப்பில் இருந்தார் பத்திரிகையாளர்கள் ராமவரம் தோட்டத்தில் எம்ஜிஆரின் கருத்தைக் கேட்க குவிந்தனர்
எம்ஜிஆருக்கு போன் செய்து விஷயத்தைச் சொன்னேன் அப்போது லஞ்ச் டைம் அவர் அப்படியா எனக் கேட்டவர் அடுத்த நிமிடமே நான் பாயசம் சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறேன் எனக் கூறினார். அது சரி தலைவரே பத்திரிகையாளர்களுக்கு என்ன பதில் தரட்டும் என்று கேட்டதும் அதையே பதிலாக சொல்லுங்கள் எனக் கூறிவிட்டார். அதன் பிறகு அமைதியாகவே இருந்தார் ஆனால் அவரது வீட்டு வாசலில் திரண்டு நின்று அழுத அவரது ரசிகர்கள் கூட்டத்தை பார்த்துவிட்டு இவர்களுக்காக எதையாவது செய்யவேண்டும் என்று எண்ணினார்.
இதற்குள் நாஞ்சில் மனோகரன்,எஸ்.டி.எஸ்.,போன்றவர்கள் எம்ஜிஆரை மீண்டும் திமுகவில் சேர்க்கும் பேச்சு வார்த்தையில் இறங்கினர். அந்த நேரம் திமுகவினரால் தாக்கப்பட்டு முசிறிபுத்தன் போன்றவர்கள் ரத்தம் வழிய வழிய எம்ஜிஆரை பார்க்கவந்தனர். என் ரசிகர்களை கைவைத்த பிறகு எந்த சமாதானத்தையும் நான் ஏற்பதாக இல்லை என்று சொன்னவர் விறுவிறுவென முடிவெடுத்து அதிமுகவை ஆரம்பித்தார் என பழைய நினைவுகளை பதிவிட்டிருந்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!