‘Jack Sparrow’ வேடத்தில் மருத்துவமனையில் குழந்தைகளை மகிழ்வித்த பிரபல நடிகர் ஜானி டெப்.!

 
ஜானி டெப்


அமெரிக்காவின் பிரபல நடிகர் ஜானி டெப். தனது பிரபலமான “பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்” திரைப்படத்தில் வரும் கேப்டன் ஜாக் ஸ்பாரோ கதாபாத்திரத்தில் உடை அணிந்து, மருத்துவமனையில் உள்ள குழந்தைகளை ஆச்சரியப்படுத்தி மகிழ்வித்தார்.  62 வயதான நடிகர் ஜானி டெப், கடந்த ஜூன் 16ம் தேதி ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட்டில் உள்ள நினோ ஜெசஸ் பல்கலைக்கழக குழந்தைகள் மருத்துவமனைக்கு தனது பிரபலமான கேப்டன் ஜாக் ஸ்பாரோ கெட்அப்பை அணிந்து சென்றார்.  


தனது புதிய படமான டே ட்ரிங்கரின் படப்பிடிப்புக்காக  தற்போது ஸ்பெயினில் இருக்கும் ஜானி டெப், மருத்துவமனையின் புற்றுநோய்  பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தைகள் வார்டுகளின் அறைக்கு அறை சென்று, நோயுடன் போராடும் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியைக் கொண்டு வந்தார்.  இதேபோல் 2021 செப்டம்பரில் ஸ்பெயினின் சான் செபாஸ்டியனில் உள்ள டோனோஸ்டியா பல்கலைக்கழக மருத்துவமனையில் குழந்தைகளை மகிழ்வித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜானி டெப்
குழந்தைகள் மருத்துவமனைகளைப் பார்வையிட நடிகர் ஜானி டெப்  உலகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளின் குழந்தைகள் வார்டுகளுக்குச் சென்றுள்ளார். இதில் வான்கூவர், பாரிஸ், லண்டன், பிரிஸ்பேன், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவின் பல நகரங்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது