நடிகர் கிருஷ்ணா தலைமறைவு... கிருஷ்ணாவை பிடிக்க 5 தனிப்படைகள் அமைப்பு... நடிகைகளுக்கும் தொடர்பு!

போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில், இது குறித்த வழக்கில், நடிகர் கிருஷ்ணாவிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்திருந்தனர். இந்நிலையில் நடிகர் கிருஷ்ணா தலைமறைவானார். தலைமறைவாக உள்ள நடிகர் கிருஷ்ணாவை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு நடிகர் கிருஷ்ணாவைப் போலீசார் தேடி வருகின்றனர்.
போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகர் ஸ்ரீகாந்த் அளித்த வாக்குமூலம் அடிப்படையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. நடிகர் கிருஷ்ணாவின் செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ள நிலையில் 5 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டை தொடர்ந்து நடந்து வருகிறது.
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகைகள் இருவரும் போதைப் பொருட்களைப் பயன்படுத்தியதாகவும், நடிகர் ஸ்ரீகாந்த் அந்த 2 நடிகைகளுக்கு போதைப் பொருள் வாங்கிக் கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மேலும் சில நடிகர், நடிகைகள் போதைப் பொருள் வழக்கில் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!