நடிகர் கிருஷ்ணா ஜாமீன் கேட்டு மனு தாக்கல்!

 
 நடிகர் கிருஷ்ணா
 


போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைதான நடிகர் கிருஷ்ணா போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

தனது ஜாமீன் மனுவில், நான் எந்த தவறும் செய்யவில்லை, என்னிடம் இருந்து போதைப்பொருள்  எதுவும் கைப்பற்றப்படவில்லை, போதைப்பொருளை பயன்படுத்தியதற்கான எந்த ஆதாரமும் மருத்துவ அறிக்கையில் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக கொகைன் போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகா் ஸ்ரீகாந்தை நுங்கம்பாக்கம் போலீசார் கடந்த திங்கட்கிழமை கைது செய்த நிலையில், போலீசாரின் விசாரணையில், அதிமுக முன்னாள் நிா்வாகி பிரசாத், போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சோ்ந்த பிரதீப்குமாா் ஆகியோா் மூலமாக கொகைன் போதைப் பொருளை நடிகர் ஸ்ரீகாந்த் வாங்கியிருப்பது தெரியவந்தது.

 நடிகர் கிருஷ்ணா

இந்தக் கும்பலுக்கும் கழுகு திரைப்பட நடிகா் கிருஷ்ணாவுக்கும் தொடா்பு இருப்பது தெரிய வந்ததையடுத்து நடிகா் கிருஷ்ணாவிடம் விசாரணை நடத்த போலீசா திட்டமிட்டிருந்தனா். ஆனால் அவா் கேரளத்தில் திரைப்பட படப்பிடிப்பில் இருந்ததால் விசாரணைக்கு ஆஜராமல் இருந்தாா். மேலும் அவரது செல்போனும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

 நடிகர் கிருஷ்ணா

இதையடுத்து தனிப்படையினா் கிருஷ்ணாவை தேடி கேரளத்துக்கு சென்றிருந்த நிலையில், தனது வழக்குரைஞருடன் நுங்கம்பாக்கம் போலீசார் முன் கடந்த புதன்கிழமை நண்பகல் நடிகர் கிருஷ்ணா ஆஜரானாா்.  கைதாகி எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கிருஷ்ணாவை ஜூலை 10ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது