மகன் குறித்து அவதூறு... நெல்லை காவல் கண்காணிப்பாளரிடம் நடிகர் நெப்போலியன் புகார்!

 
நெப்போலியன்
 

மகனின் உடல் நிலை குறித்தும், மருமகள் குறித்தும் அவதூறு செய்திகள் பரப்பப்படுவதாக நடிகர் நெப்போலியன் தரப்பில் நெல்லை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.தமிழ் சினிமாவில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் நெப்போலியன், திமுகவில் இணைந்து தேர்தலில் வெற்றிப் பெற்று எம்பியாக ஜொலித்தார். 

போலீஸ்

அரசியலிலும், சினிமாவிலும் உச்சத்தில் இருந்த போதே, தனது குடும்ப நலனுக்காக அனைத்தையும் ஒதுக்கி விட்டு அமெரிக்கா சென்று செட்டிலாகி விட்டார்.இவருக்கு ஜெயசுதா என்ற மனைவியும், குணால், தனுஷ் என்ற இரு மகன்களும் உள்ளனர். இதில் தனுஷுக்கு 4 வயதாகும்போது தசை சிதைவு நோய் தாக்கிய நிலையில், இதற்காக சிகிச்சை பெற்று ஓரளவு குணமடைந்தார். இதற்கிடையில், திருநெல்வேலியை அடுத்து மூலக்கரைப்பட்டியைச் சேர்ந்த விவேகானந்தர் என்பவரின் மகள் அக்சயாவுக்கும், தனுஷுக்கும் ஜப்பானில் சமீபத்தில் திருமணம் நடந்தது.

இந்நிலையில் தனுஷ் உடல் நிலை குறித்தும், அக்சயா குறித்தும் சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பப்படுவதாக நடிகர் நெப்போலியன் தரப்பில் நெல்லை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தனுஷ் மற்றும் அக்சயா இருவரும் நல்ல உடல் நலத்துடன் சேர்ந்து வாழ்து வரும்நிலையில், அவர்கள் குறித்து இணையத்தில் அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?