அதிர்ச்சி!! நடிகர் பிரிதிவிராஜ் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி!!

 
நடிகர் பிரித்விராஜ்

பிருத்விராஜ் நடிக்கும் 'விளையாட்டு புத்தர்' படத்தின் படப்பிடிப்பு கேரள மாநிலம் மறையூரில் நடைபெற்று வருகிறது. சண்டை காட்சியில் திடீரென நடிகர் பிருத்விராஜுக்கு  காலில் படுகாயம் ஏற்பட்டது. உடனடியாக  அருகில்  உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு, கொச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில்  அவருக்கு இன்று அறுவை சிகிச்சை செய்யப்படுவதாக, மருத்துவர்கள் தெரிவித்தனர்.

நடிகர் பிரித்விராஜ்

மலையாளத் திரையுலகில் முண்ணனி கதாநாயகன்களில் ஒருவர் நடிகர் பிருத்விராஜ். இவர் இயக்குநராகவும் சாதித்து காட்டியவர். இந்நிலையில் இவர் தற்போது விளையாத் புத்தா திரைப்படத்தில்  ஜெயன் நம்பியார்   இயக்கத்தில் நடித்து  வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் மரையூரில் 50நாட்களுக்கும் மேலாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  நேற்றும் வழக்கம்போல்  படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் நடிகர் பிருத்விராஜ் அந்தரத்தில் பறந்தபடி சண்டையிடும் காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்த ஆக்‌ஷன் காட்சிகள் எடுப்பதற்காக ராட்சத கிரேன்கள் வரவழைக்கப்பட்டு இருந்தன.   இந்த காட்சியில் டூப் எதுவும் போடாமல் நடிகர் பிருத்விராஜ் ரிஸ்க் எடுத்து நடித்துக் கொண்டிருந்தார்.

நடிகர் பிரித்விராஜ்

இதில் எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் நடிகர் பிருத்விராஜுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. வலியால் கதறித் துடித்த நடிகர் பிருத்விராஜை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்த மருத்துவர்கள், அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனக் கூறிவிட்டனர். அறுவை சிகிச்சைக்கு பிறகு   குறைந்தது 2 மாதங்களாவது ரெஸ்ட் எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.  இதனால் விளையாத் புத்தா படத்தின் படப்பிடிப்பு பாதியில் நிற்கும் சூழல் உருவாகி உள்ளது. இதனையடுத்து  நடிகர் பிருத்விராஜ் விரைவில் குணமடைய வேண்டி அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இச்சம்பவம் மலையாள திரையுலகில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

From around the web