விஜய் எடுத்திருக்கும் முயற்சியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்... நடிகர் ராகவா லாரன்ஸ்!

நடிகர் ராகவா லாரன்ஸ் தொண்டு நிறுவனம் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தனியார் தொலைக்காட்சி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் கோரிக்கை வைத்த புதுக்கோட்டை அருகே உள்ள குறுக்களையாப்பட்டி கிராமத்தில் வசித்து வரும் மாணவனின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு 10 லட்சம் ரூபாய் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைத்து கொடுத்துள்ளார். அதனை திறந்து வைத்த நடிகர் ராகவா லாரன்ஸுக்கு மேளதாளங்கள் முழங்க பட்டாசுகள் வெடித்தும் ஆள் உயர மாலை அணிவித்தும் மலர்களை தூவியும் ஆரத்தி எடுத்தும் கிராம மக்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.
இதன் பிறகு பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ், “மாற்றம் என்ற அமைப்பை ஆரம்பித்து என்னால் முடிந்தவற்றை சொந்த பணத்தை வைத்து செய்து வருகின்றேன். அதனால் அரசியல் ரீதியாக நான் எங்கே சென்றாலும் பேசுவது கிடையாது. அரசியலை தொட வேண்டாம் என்றுதான் நான் நினைக்கின்றேன். தற்போது காஞ்சனா 4 படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதன்பிறகு பென்ஸ் என்ற ஒரு படம் நடித்து வருகிறேன். காலபைரவா என்ற படமும் பண்ணுகிறேன். விஜயசாந்தியை தான் தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்று கூறுவார்கள். அதேபோல் நயன்தாராவை லேடி சூப்பர் ஸ்டார் எனக் கூப்பிடுவது தப்பில்லை, அவரும் நிறைய சாதனைகளை செய்துள்ளார். அதை தற்போது அவர் வேண்டாம் என்று சொல்கிறார், என்றால் அது அவரின் விருப்பம்.
விஜயகாந்த் என்றது ஒருத்தர் தான். அதேபோல் ஒவ்வொருத்தவரும் ஒவ்வொருத்தராக தான் இருக்கிறார்கள்! ஒவ்வொரு இடத்தை ஒவ்வொருவரால் நிரப்ப முடியாது. இவர் விஜயகாந்த் மாதிரி என்று சொல்லலாம்... இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாதிரி என்று சொல்லலாம்... ஆனால் அவர்கள் இடத்தை யாரும் நிரப்ப முடியாது. அவரவர்கள் இடத்தில் அவர் அவர்கள் இருப்பார்கள். புதிதாக வருபவர்கள் அவர்களுக்கென்று புதிய வழியை கண்டுபிடித்து அவர்களுக்கென்று ஒரு பாதையை ஏற்படுத்திக் கொண்டால் நன்றாக இருக்கும். நடிகர் விஜய் எனக்கு நண்பர். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள், அவர் எடுத்துள்ள முயற்சியில் அவர் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என கூறியுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!