ஜூன் 1ல் நடிகர் ராஜேஷ் இறுதிச்சடங்குகள்... மகள் அமெரிக்காவில் இருந்து கிளம்பினார்!
நடிகர் ராஜேஷின் மகள் அமெரிக்காவில் இருந்து கிளம்பிய நிலையில், மே 31ம் தேதி இரவு சென்னை வந்தடைகிறார். அவர் சென்னை வந்ததும் ஜூன் 1ம் தேதி ராஜேஷ் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

‘கன்னிப் பருவத்திலே’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ராஜேஷ். இவர் தமிழ் மலையாளம், தெலுங்கு திரையுலகிலும் நடித்து வந்தார். தொடர்ந்து 40 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் இருந்து வந்தார்.
வெள்ளித்திரையில் நடிகராக மட்டுமின்றி டப்பிங் கலைஞர், எழுத்தாளர், சின்னத்திரை நடிகர் என பன்முகத் திறமை கொண்டவர். அனைத்திலுமே தனது முத்திரையைப் பதித்த நடிகர் ராஜேஷுக்கு ஜோதிடத்தில் அசாத்திய திறமை இருந்தது குறிப்பிடத்தக்கது.

150க்கும் மேலான படங்களில் நடித்து கிட்டதட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் பயணித்தவர். ஏற்கனவே மூச்சுத்திணறல் பிரச்சனைகள் இருந்து வந்த நிலையில், இன்று காலை திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக உறவினர்கள் கூறியுள்ளனர். அவரது திடீர் மறைவு திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
