நடிகர் ராஜேஷ் கடந்து வந்த பாதை... படப்பிடிப்புக்காக முதலில் பங்களா கட்டிய நடிகர்!
தமிழ் திரையுலகில் முண்ணனி கதாநாயகனாகவும், குணச்சித்திர நடிகராகவும் இருந்து வந்தவர் நடிகர் ராஜேஷ். இன்று காலை திடீர் உடல் நலக்குறைபாடு காரணமாக காலமானார். அவரது திடீர் மறைவு திரையுலகில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவர் திரைத்துறையில் 49 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வருகிறார். இவர், 150இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் முன்னணிக் கதாபாத்திரங்களிலும் துணை வேடங்களிலும் நடித்துள்ளார். கதாநாயகன் முதல் குணச்சித்திர நடிகர் வரை பல்வேறு வேடங்களில் நடித்துள்ளார்.
ராஜேஷ் 1949 ல் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில் வில்லியம்சு நாட்டார், இலில்லி கிரேசு மண்கொண்டாரின் மகனாகப் பிறந்தார். ஆனால் இவரது குடும்பம் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அணைக்காடு பகுதியில் இருந்தது. இவர் திண்டுக்கல், வடமதுரை, மேலநாதம் அணைக்காடு, சின்னமனூர் தேனி மாவட்டங்களில் படித்தார். காரைக்குடி அழகப்பா கல்லூரியில் பி. யு. சி முடித்த பிறகு, இவர் பச்சையப்பா கல்லூரியில் சேர்ந்தார். புரசைவாக்கத்தில் உள்ள புனித பவுல் உயர்நிலைப் பள்ளியிலும், பின்னர் 1972 முதல் 1979 வரை திருவல்லிக்கேணியிலுள்ள கெல்லெட் மேல்நிலைப் பள்ளியிலும் ஆசிரியராகப் பணிபுரிந்தவர் .

1974 ல், இவருக்கு அவள் ஒரு தொடர்கதை படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்திருந்தார். இதனையடுத்து கதாநாயகனாக இவரது முதற் படம் இராஜ்கண்ணு தயாரித்த கன்னிப்பருவத்திலே . கே. பாலசந்தரின் அச்சமில்லை அச்சமில்லை படத்தில் ராஜேஷ் நடித்தார். பின்னர், இவர் குணச்சித்திர வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். கமலகாசனுடன் சத்யா, மகாநதி, விருமாண்டி போன்ற படங்களில் நடித்தார். உணவகம், வீடு நிலம் வாங்கி விற்கும் வணிகத்தில் உள்ளார். இவர் நகரத்தில் ஒரு முன்னணி கட்டுமானராகவும் இருந்தவர். ஆங்கிலத் திரைப்பட நடிகர்களின் வாழ்க்கை வரலாறுகளையும் தமிழில் எழுதினார்.
கிறிஸ்தவராக இருந்தாலும் பெரியாரின் சித்தாந்தங்களில் தீவிரமாக இருந்து சோதிடம் குறித்து பல புத்தகங்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். 1983 ல், புகழ்பெற்ற சமூக சீர்திருத்தவாதியும் திராவிடத் தலைவருமான பட்டுக்கோட்டை தாவிசு வனத்திராயரின் பேத்தியான ஜோன் சிலிவியா வனத்திராயரை மணந்தார். இவர்களுக்கு திவ்யா என்ற ஒரு மகளும், தீபக் என்ற ஒரு மகனும் உள்ளனர். இவர் 2014 ல் அறிமுகமானார். ராஜேசின் மனைவி 2012ல் காலமானார்.
1985 இல் சென்னை கே. கே. நகர் அருகே திரைப்பட படப்பிடிப்புக்காக ஒரு பங்களா கட்டிய முதல் தமிழ் நடிகர் இவரே. இந்த கட்டிடம் அப்போதைய முதலமைச்சர் எம். ஜி.ஆரால் திறந்து வைக்கப்பட்டது. அந்த வீட்டில் தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளிவந்த பல திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நிறைவடைந்தன. பின்னர் 1993 ல் வீடு, நிலம் வாங்கி விற்கும் வணிகத்தைத் தொடங்கியபோது அதை விற்று விட்டார். 90களின் முற்பகுதியில், இவரது நண்பர் ஜேப்பியார் அறிவுறுத்தியபடி, இவர் வீடு, நிலம் வாங்கி விற்கும் வணிகத்தைத் தொடங்கினார். பின்னர் இவர் உணவகத்தையும், கட்டுமான வணிகத்தையும் தொடங்கினார். 1987 முதல் 1991 வரை வி. என். ஜானகியை ஆதரித்து தீவிர அரசியலில் இறங்கியவர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
