நடிகர் சரத்பாபு காலமானார்!! திரையுலகில் தொடரும் சோகம்!!

 
சரத்பாபு

திரையுலகுக்கு போதாத காலம் . மூத்த நடிகர்கள் தொடங்கி பலர் திடீர் திடீரென உடல் நலக்குறைபாடு காரணமாக உயிரிழந்து வருகின்றனர். இதனால் திரையுலகினர் பெரும அதிர்ச்சி அடைந்துள்ளனர். சமீபத்தில் திடீரென உயிரிழந்த நடிகர் மயில்சாமி, இயக்குநர்  மனோபாலா இறப்பிலிருந்தே இன்னும் திரையுலகம் மீளவில்லை. அதற்குள் நடிகர் சரத்பாபு உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவருக்கு வயது 71.

 1973ல் தெலுங்கில் அறிமுகமாகி பின்னர் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் நடிகர் சரத்பாபு.  70,80 களில் முன்னணி நடிகராக வலம் வந்த சரத்பாபு கமல், மற்றும் ரஜினி, சிவாஜி, சிரஞ்சீவி  என முண்ணனி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். இவர்  கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல் நலக்குறைவால், ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அவரது உயிர் பிரிந்தது. நடிகர் சரத்பாபு மறைவுக்கு திரையுலகினர்,பிரபலங்கள், ரசிகர்கள்  இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிற மொழிகளில் இருந்து தமிழுக்கு வந்து வெற்றிப்படங்களைத் தந்திருந்தாலும், தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த நடிகராக இன்று வரையில் இருந்து வருகிறார் நடிகர் சரத் பாபு. ரஜினியின் நெருங்கிய நண்பரான நடிகர் சரத் பாபு, தற்போது வயோதிகம் காரணமாக, நடிப்பிலிருந்து விலகி ஹைதராபாத்தில் தனது வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், திடீர் உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூருவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏப்ரல் 24 ம் தேதி முதல் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சைப் பெற்று வந்த  நடிகர் சரத்பாபுவுக்கு செப்சிஸ் நோய் காரணமாக சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல் போன்ற உடலின் முக்கிய உறுப்புகள் செயலிழந்து வந்தன.  

சரத் பாபு

மறைந்த இயக்குனர் பாலச்சந்தரின் பட்டின பிரவேசம் படத்தில் 1971ம் ஆண்டு தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆன நடிகர் சரத் பாபு, அதன் பின்னர் சுமார் 40 ஆண்டு காலமாக இருநூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நிழல் பார்க்கிரது, வட்டத்துக்குள் சதுரன், முள்ளும் மலரும், உதிரிபூக்கள், நெஞ்சத்தை கிள்ளாதே போன்ற படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்த் உடன் அண்ணாமலை, முத்து, நெற்றிக்கண், வேலைக்காரன் போன்ற பல படங்களில் நடித்து புகழ்பெற்றார்.

சரத் பாபு

ஹீரோ, வில்லன், குணச்சித்திர வேடம் என தனக்கு கிடைக்கும் கதாப்பாத்திரங்கள் அனைத்திலும் நடித்து கலக்கி உள்ளார். குறிப்பாக கமல்ஹாசன், ரஜினிகாந்த் படங்களில் நண்பர் கேரக்டர் என்றாலே தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் சரத் பாபுவை தான் அழைப்பார்கள் என்ற நிலை அப்போது இருந்தது.  தமிழில் கடைசியாக பாபிசிம்ஹா நடிப்பில் வெளியான வசந்த முல்லை படத்தில் நடித்து இருந்தார். மேலும் சில சின்னத்திரை தொடர்களிலும் சரத் பாபு நடித்திருக்கிறார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web