நடிகர் ஷாருக்கானுக்கு மூக்கில் அறுவை சிகிச்சை!! ரசிகர்கள் அதிர்ச்சி!!

 
ஷாருக்கான்

அமெரிக்காவில் படப்பிடிப்பிற்காக சென்ற ஷாருக்கானுக்கு படப்பிடிப்பில் நடந்த விபத்தில் மூக்கில் காயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த படப்பிடிப்பில்  நடிகர் ஷாருக்கான் காயமடைந்தார்.  இதனை அறிந்த அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். படப்பிடிப்பு தளத்தில் நடந்த ஒரு விபத்தில் ஷாருக்கானின் மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்து  உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஷாருக்கானுக்கு மூக்கில்  அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  

ஷாருக்கான்

காயம் ஏற்பட்டதால் மேற்கொண்டு படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு ஷாருக்கான் இந்தியா திரும்பிவிட்டார். அவர் தற்போது மும்பையில் உள்ள தனது வீட்டில்  ஓய்வு எடுத்து வருகிறார்.மருத்துவர்கள்  ஷாருக்கான் இல்லத்திற்கு சென்று சிகிச்சையளித்து வருகின்றனர்.பாலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர்  ஷாருக்கான். இவரின் அட்லீ இயக்கத்தில் ஜவான் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். அதேபோல் வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ள இப்படத்தில் யோகிபாபு, பிரியாமணி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் களமிறக்கப்பட்டுள்ளது.   பிரம்மாண்டமாக தயாராகி உள்ள இந்த ஜவான் திரைப்படம்   செப்டம்பர்  7ம்  தேதி திரைக்கு வர உள்ளது. ஜவான் படத்தின் படப்பிடிப்பு  முடிந்து பின்னணி பணிகள் தற்போது படுஜோராக நடைபெற்று வருகிறது. ஜூலை 7ம் தேதி ரிலீஸ் ஆக உள்ள டாம் குரூஸின் மிஷன் இம்பாசிபிள் படத்துடன் ஜவான் படத்தின் டிரைலரும் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.    

ஷாருக்கான்
ஜவான் படத்திற்கு பிறகு அடுத்த பட பணிகளுக்காக அமெரிக்கா சென்றிருந்தார்.  அங்கு படப்பிடிப்பில் கலந்துகொண்டபோது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி உள்ளார். இதில் அவரது மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக  படக்குழுவினர்  அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு   மூக்கில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அறுவைசிகிச்சைக்கு பிறகு  இந்தியா திரும்பியுள்ள ஷாருக்கான் தற்போது படிப்படியாக குணமாகி வருகிறார்.   இதுகுறித்து நடிகர் ஷாருக்கான் தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. ஷாருக்கான் ரசிகர்கள் விரைவில் குணமடைய  பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web