என்ன தான் பிரச்சனை? திரையுலகில் பரபரப்பு... நடிகர் திலகம் சிவாஜியின் ‘அன்னை இல்லத்தை’ ஜப்தி செய்ய உத்தரவு!

 
சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி

பெருந்தலைவர் காமராஜர் முதற்கொண்டு அன்றைய அரசியல் தலைவர்கள் அத்தனைப் பேரும் அந்த வீட்டிற்குள் சென்றுள்ளனர். எத்தனை பிரம்மாண்டமான விருந்து நிகழ்ச்சிகளைப் பார்த்திருக்கும். திரையுலகின் மிகப் பெரிய ஆளுமையாக இருந்த நடிகர் திலகம் சிம்மக்குரல் சிவாஜி கர்ஜனை செய்து ஆட்சி செய்த அன்னை இல்லம் ஜப்தி செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

'ஜகஜால கில்லாடி' என்கிற படத்தை தயாரிப்பதற்காக வாங்கிய கடனை திருப்பி செலுத்தாதது தொடர்பான வழக்கில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது திரையுலகினரை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இந்நிலையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகருமான துஷ்யந்த், அவரது மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் நடிகர் விஷ்ணுவிஷால், நடிகை நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் ஜகஜால கில்லாடி என்ற படத்தை தயாரித்தனர்.

இந்த படத்தின் தயாரிப்பு பணிகளுக்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் என்கிற நிறுவனத்திடம், ரூபாய் 3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் கடனாக வாங்கியிருந்தனர். இந்த கடன் தொகையை வருடத்திற்கு 30 சதவீத வட்டியுடன் திருப்பிக் கொடுப்பதாக பத்திரத்தில் உறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் இவர்கள் உறுதியளித்தப்படி கடன்தொகையை திருப்பி செலுத்தாததால், இந்த விவகாரத்தில் தீர்வு காணும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி டி.ரவீந்திரன் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டார்.

நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு

இந்த விவகாரத்தை விசாரித்த மத்தியஸ்தர் நீதிபதி ரவீந்திரன், கடன் தொகையை வட்டியுடன் சேர்த்து 9 கோடியே 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை வசூலிக்க ஏதுவாக ஜகஜால கில்லாடி படத்தின் அனைத்து உரிமைகளையும், தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவன நிர்வாக இயக்குனரிடம் ஒப்படைக்கும்படி கடந்த 2024ம் ஆண்டு மே 4ம் தேதி உத்தரவிட்டார்.

படத்தின் மொத்த உரிமைகளையும் பெற்று, அவற்றை விற்று கடன் தொகையை ஈடு செய்யவும், மீதத்தொகையை ஈசன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்திடம் வழங்கவும் உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவின்படி படத்தின் அனைத்து உரிமைகளையும் வழங்கக் கோரிய போது, படம் முழுமையடையவில்லை எனக் கூறி பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், மத்தியஸ்தர் தீர்ப்பை அமல்படுத்தும் வகையில், ராம்குமாரின் தந்தையான சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்து, பொது ஏலம் விட உத்தரவிடக் கோரி, தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது.

நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு

இது குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தற்போது வரை கடன் தொகை வட்டியுடன் சேர்த்து 9 கோடியே 39 லட்சத்து 5 ஆயிரத்து 543 ரூபாய் வசூலிக்க வேண்டியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, பதில் மனு தாக்கல் செய்ய ஈசன் புரொடக்‌ஷன்ஸ் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதி இந்த வழக்கில் தொடர்ந்து பதில் மனு தாக்கல் அவகாசங்கள் கேட்கப்படுவதாக கூறி, சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். மேலும், இந்த உத்தரவு குறித்து சம்பந்தப்பட்ட சார் பதிவாளருக்கு தகவல் தெரிவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கு நாளை மறுதினம் மார்ச் 5 ம் தேதி மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?