RIP கேப்டன்... நம்பிக்கையான தலைவரை இழந்த தமிழகம்... நடிகர் சிவக்குமார் இரங்கல்...!

 
சிவக்குமார்

தமிழ் திரையுலகில் முண்ணனி நடிகரும் தமிழகத்தின் முன்னாள் எதிர்கட்சி தலைவருமான கேப்டன் விஜயகாந்த் இன்றுகாலை உடல் நலக்குறைவால் சென்னையில் தனியார் மருத்துவமனையில் காலமானார். இதனால் திரையுலகமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. தொண்டர்கள் கதறி அழுகின்றனர். இவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த நீ...ண்ட வரிசையில் தொண்டர்கள், ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர்.

ஸ்டாலின் பிரேமலதா

முதல்வர் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார். பிரதமர், நிர்மலா சீதாராமன் உட்பட பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.திரையுலக நண்பர்கள், உறவினர்கள், ரசிகர்கள், தொண்டர்கள் அவரது முகத்தை ஒரே ஒரு தடவை பார்த்து விடமாட்டோமா என ஏக்கத்துடன் கண்ணீருடன் காத்துள்ளனர். இந்நிலையில் தமிழ் திரையுலகின் மூத்த நடிகரான சிவக்குமார் விஜயகாந்த்துக்கு இரங்கல் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். 

தமிழக அரசியலில் 
எம்.ஜி.ஆரை அடுத்து
நம்பிக்கையான 
ஒரு தலைவராக
உருவாகிக் கொண்டருந்தவர்..
ஆயிரக்கணக்கில் ரசிகர்களை 
மாதம் ஒருமுறை
நேரில் சந்தித்ததை
கோபி படப்பிடிப்பில்
பார்த்துள்ளேன்.
தி.நகர் ரோகிணி லாட்ஜில்

விஜயகாந்த்
உள்ள தன் அறையில்
நண்பர்களை தங்கவிட்டு
படப்பிடிப்பு முடிந்து வந்து
 வராண்டாவில் படுத்துக்கொள்வார்.
எளிமையானவர், நேர்மையானவர்.
நடிகர் சங்க தலைவராக அவர் இருந்த போது கமல், ரஜினியை மலேசிய கலைநிகழ்ச்சிக்கு நேரில் அழைக்கச்சென்று அவர்கள் கரம் பற்றி வேண்டிக்கொண்டவர்.
'சாமந்திப்பூ' -படத்தில் சிறு வேடத்தில் என்னோடு நடித்தார்.   'புதுயுகம்' - படத்தில் என் உயிர் நண்பனாக நடித்தார்..
கலையுலகம், அரசியல் உலகம் ஒரு நல்ல மனிதரை இழந்துவிட்டது. சூர்யா, கார்த்தியுடன் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் - சிவகுமார்

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web