ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார் நடிகர் சூரி - ஷூட்டிங்கில் நடந்தது என்ன?!

 
சூரி

நடிகர் சூரி தற்போது நடித்து வரும் 'மண்டாடி' படத்தின் படப்பிடிப்பு தளத்தில், மக்களைக் கடுமையாக நடத்திய பவுன்சர்களின் செயல் குறித்து ரசிகர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் புகார் அளித்த நிலையில், அதற்கு நடிகர் சூரி உடனடியாகப் பதிலளித்து, மன்னிப்புக் கேட்ட சம்பவம் பலரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

சூரி நடித்து வரும் 'மண்டாடி' திரைப்படத்தை எல்ரட் குமாரின் ஆர்.எஸ். இன்போ நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாகவும், ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பாளராகவும் பணியாற்றுகின்றனர். மீனவர்களின் படகுப் பந்தயத்தை மையமாக வைத்து இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சூரி

இந்நிலையில், படப்பிடிப்பு நடக்கும் பகுதியில் உள்ள ஒரு ரசிகர், நடிகர் சூரியை எக்ஸ் (சமூக வலைத்தளம்) தளத்தில் 'டேக்' செய்து ஒரு பதிவைப் போட்டிருந்தார். அதில், "அன்புள்ள சூரி அண்ணா, உங்கள் பட ஷூட்டிங் எங்கள் ஊரில் நடப்பது மகிழ்ச்சியே. ஆனால், இரவு நேரப் படப்பிடிப்பில் வேடிக்கை பார்க்க வரும் எங்கள் பகுதி மக்களிடம் உங்களது பவுன்சர்கள் கொஞ்சம் கடுமையாக நடந்து கொள்கிறார்கள். தயவுசெய்து தயாரிப்பு நிறுவனத்திடம் சொல்லி வைக்கவும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் பதிவைப் பார்த்த நடிகர் சூரி உடனடியாகப் பதிலளித்தார். "தம்பி, உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மனமார்ந்த நன்றி. படப்பிடிப்பில் ஏற்பட்ட தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். இதை தயாரிப்புக் குழுவிடமும், பவுன்சர்ஸ் சகோதரர்களிடமும் தெரிவித்து, இனி மிகுந்த கவனத்துடன் இருக்கச் சொல்கிறோம். எப்போதும் போல உங்கள் அன்பே எங்களுக்குப் பலம். மீண்டும் நன்றி" என்று நெகிழ்ச்சியுடன் மன்னிப்புக் கேட்டுப் பதிவிட்டார். நடிகரின் இந்தத் துரிதமான பதில், அவரது ரசிகர்களுக்கு மேலும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!