திருவண்ணாமலையில் நடிகர் சூரி சாமி தரிசனம்..!

தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக இருந்து ஹீரோவாக அவதாரம் எடுத்திருப்பவர் நடிகர் சூரி. இவர் சமீபகாலமாக தன்னுடைய நேர்த்தியான கதைத் தேர்வுகளின் மூலம் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். விடுதலை, கொட்டுக்காளி, கருடன் வரிசையில் சமீபத்தில் வெளியான மாமன் திரைப்படமும் சூரிக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்துள்ளது.
இயக்குநர் பிரஷாந்த் பாண்டியராஜன் இயக்கத்தில், ஐஸ்வர்யா லக்ஷ்மி, சுவாசிகா உட்பட பலர் இந்தப்படத்தில் நடித்திருந்தனர். குடும்பத்தில் எதார்த்தமாக நிகழும் பிரச்சனைகளை அழகாக காட்சிப்படுத்திய குடும்பக்கதையாக ‘மாமன்’ திரைப்படம் அமைந்திருந்தது. மாமன் வெற்றியை தொடர்ந்து நடிகர் சூரி அடுத்ததாக ‘மண்டாடி’ திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடிகர் சூரி, குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக கோயில் நிர்வாகிகள் அவரை வரவேற்று சிறப்பு மரியாதை அளித்தனர். சிறப்பு மகா யாகத்தில் கலந்துகொண்ட அவர், சாமி தரிசனம் முடிந்து கோவிலில் இருந்த ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!