நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் வழக்கில் அதிரடி கைது!

தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் ஸ்ரீகாந்த். இவர் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். முன்னாள் அதிமுக பிரமுகர் பிரசாத் மற்றும் கொக்கைன் விநியோக வழக்கில் கைது செய்யப்பட்ட பிரதீப் குமார் இவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இதனை காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
இதையடுத்துநடிகர்ஸ்ரீகாந்திடம் சுமார் 2 மணி நேர விசாரணை நடத்தப்பட்டு, அவரது ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டன. சோதனையில் போதைப்பொருள் பயன்பாடு உறுதியானதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
பிரசாத், சென்னையில் பெரிய அளவிலான கொக்கைன் கடத்தல் வலையத்துடன் தொடர்புடையவர். ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு கொக்கைன் விநியோகித்ததாகவும் பிரதீப் குமார் வாக்குமூலத்தில் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. “ஸ்ரீகாந்த் ஒரு கிராம் கொக்கைனை ரூ.12,000-க்கு வாங்கி, ஒரு பப்-ல் பயன்படுத்தியதை நேரில் பார்த்தேன்,” என பிரதீப் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில், ஸ்ரீகாந்துக்கு சம்மன் அனுப்பப்பட்டு, அவர் விசாரணைக்கு ஆஜரான நிலையில் இன்று கைது செய்யப்பட்டார். மற்றொரு நடிகரும் விசாரணை வளையத்தில் உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீகாந்த் தரப்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியாகவில்லை.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!