கேப்டன் சமாதியில் கண்ணீர் விட்டு கதறி அழுத நடிகர் சூர்யா... !

 
சூர்யா

கேப்டன் விஜயகாந்த் டிசம்பர் 28ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவருக்கு வயது 71. இவரது  மறைவுக்கு முதல்வர், அரசியல் பிரபலங்கள், நடிகர்கள், நடிகைகள், உறவினர்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். தமிழகம் முழுவதும் இருந்து 15 லட்சம் பேர் அவரது இறுதி யாத்திரையில் கலந்து கொண்டனர்.

கேப்டன்

வழி நெடுக பூத்தூவி கதறி அழுது கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இவரது மறைவு  தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. சூர்யா, பாரதிராஜா உட்பட சிலர் நேரில் வரமுடியாமல்   சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டு வருத்தம் தெரிவித்தனர். பின்பு 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் சென்னை கோயம்பேடு  தேமுதிக அலுவலகத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

சூர்யா

இந்நிலையில், விஜயகாந்த் நினைவிடத்தில் இன்று நடிகர் சூர்யா மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இங்கு தொடர்ந்து  5 நிமிடத்திற்கு மேல் தரையில் அமர்ந்த அவரது சமாதியில்  கண்ணீர்விட்டு கதறி அழுதார்.  இதனைத்தொடர்ந்து, சாலிகிராம இல்லத்தில் அவரது  மனைவி பிரேமலதா, மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் இருவருக்கும் ஆறுதல் கூறினார்.  சூர்யாவை தொடர்ந்து, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நினைவிடத்தில் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web