நடிகர் விஜய் ஊடக விளம்பர வெளிச்சத்திற்காக அப்படி பேசுகிறார்... கடுப்பான கே.என்.நேரு!

 
கே.என்.நேரு


“நடிகர் விஜய் ஊடக விளம்பர வெளிச்சத்திற்காக அப்படி பேசுகிறார் ” என்று விஜய் மகளிர் வாழ்த்து குறித்து அமைச்சர் கே என் நேருவிடன் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார்.

இன்று திருச்சி கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற மகளிர் சுய உதவி குழுவினருக்கு வங்கி கடன் உதவிகளை வழங்கும் விழாவில் கலந்து கொண்ட நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு செய்தியாளர்களை சந்தித்தபோது, “தமிழகம் முழுவதும் இன்று நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த பெண்கள் தமிழகத்தில் பாலியல் தொல்லை அதிகரித்துள்ளது” என ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனரே என கேள்வி எழுப்பினர்.

கே.என்.நேரு

தமிழ்நாட்டில் இது  பெண்களுக்கான ஆட்சி , மகளிர் தினத்தில் நான் சொல்கிறேன் இந்த 4 ஆண்டு காலம் தமிழக முதலமைச்சர் கொடுத்திருக்கும் திட்டங்களில் பெரும்பாலான திட்டங்கள் மகளிர்க்கான  திட்டங்கள் தான்.  எனவே வேண்டுமென்றே ஏதாவது குறை சொன்னால் தான் அவருக்கு ஊடக  விளம்பரம் கிடைக்கும் என்பதால் பேசுகிறார். 

விடுபட்ட மகளிருக்கும் அந்த திட்டங்கள் போய் சேர்வதற்கான முயற்சியில் முதலமைச்சர் ஈடுபட்டுள்ளார் . இந்த ஆட்சியை குறை சொல்ல வேண்டும் என்பதற்காக சொல்கிறார்களே தவிர உள்ளபடியே மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். அது மட்டுமல்லாமல் முதலமைச்சர் சாலையில் செல்லும்போது பெரும் பகுதியான பெண்கள் தான் நின்று வரவேற்கின்றனர்.  இது பெண்களுடைய ஆட்சி,  பெண்களுக்கான ஆட்சி,  பெண்களுக்காகவே பல திட்டங்களை கொண்டு வந்திருக்கிற ஆட்சி .

வாக்காளர் பட்டியலில் ஒருவரின் பெயர் இந்தியில் அச்சிடப்பட்டுள்ளது என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் அவர்கள் வேறு மாநிலத்தில் இருந்து பணி மாறுதலாகி இங்கு வந்துள்ளனர். அவர்கள் ஆன்லைனில் பதிவு செய்ததால் அப்படி வந்துள்ளது. அதை மாற்ற சொல்லியுள்ளோம்” என்றார்.

கே.என்.நேரு

தமிழகத்தில் 5000 கோடி கடன் இருப்பதாக கூறும் அண்ணாமலை மத்தியில் 81 லட்சம் கோடி கடன் இருப்பதாக கூறுகிறார். து பற்றிய ஏதாவது பேசினாரா? அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டுவதை அவர்கள் விரும்பவில்லை அதனால் தான் தற்போது ரெய்டு நடத்தப்படுகிறது .  அனைத்து முதலமைச்சர்களையும் அழைத்து இந்த கோரிக்கைகளை வலியுறுத்துவதற்கான முயற்சியை நமது முதல்வர் எடுத்து வருகிறார்

இந்த ஆட்சி வந்ததில் இருந்து தொடர்ந்து திமுக ஆதரவாளர்கள் மற்றும் திமுகவினர் மீது ரெய்டு நடந்து கொண்டு தான் இருக்கிறது. 
சந்திரபாபு நாயுடு வெளியிட்ட அறிக்கையில் தெலுங்கு மக்கள் எல்லாம் தமிழக மக்கள் போல் இரு மொழிக் கொள்கை ஆங்கிலத்தை கற்றுக் கொள்ளுங்கள். உலகில் உள்ள அனைத்து நிறுவனங்களிலும் தமிழர்கள் தான் தலைவராக இருக்கிறார்கள் எனக் கூறியுள்ளார். அவர்கள் கூட்டணியில் உள்ள முதலமைச்சரே இவ்வாறு கூறியுள்ளார் ” என்றார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web