பிரபல நடிகர் மனைவிக்கு ஆபாசத் தொல்லை... ஆடிட்டர் உட்பட 2 பேர் கைது!

 
தர்ஷன்

நடிகர் தர்ஷனின் மனைவி விஜயலட்சுமி, இன்ஸ்டாகிராமில் தன்னைத் தரக்குறைவாகவும் ஆபாசமாகவும் விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெங்களூரு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்திருந்தார்.

விஜயலட்சுமி வெறும் புகார் அளிப்பதோடு நிற்காமல், தனக்கு ஆபாசத் தொல்லை கொடுத்த 18 இன்ஸ்டாகிராம் கணக்குகளைப் பட்டியலிட்டு போலீசாரிடம் ஒப்படைத்தார். ஆரம்பத்தில் நடவடிக்கை எடுக்கத் தாமதமாவதாக அவர் குற்றம் சாட்டிய நிலையில், தற்போது போலீசார் தங்களது வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இளம் நடிகர் கைது

ஏற்கனவே நிதின் மற்றும் சந்துரு ஆகிய இருவர் கைதான நிலையில், தற்போது மேலும் இருவர் சிக்கியுள்ளனர்: தார்வாரைச் சேர்ந்த பிரசாந்த் தலவாரா எனும் ஆடிட்டர் ஒருவர் சிக்கியுள்ளார். படித்த ஒருவரே இது போன்ற தரம் தாழ்ந்த செயலில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதே போன்று உப்பள்ளியில் உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலைய மேலாளராகப் பணியாற்றி வரும் நாகராஜ் குல்லப்பா என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் விஜயலட்சுமியின் புகைப்படங்களுக்குக் கீழே ஆபாசமான கமெண்ட்டுகளைப் பதிவிட்டதை ஒப்புக்கொண்டுள்ளனர். இவர்களை பெங்களூருவுக்கு அழைத்து சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!