நடிகர் யோகிபாபு பழனியில் முருகன் கோவிலில் சாமி தரிசனம் ... செல்பி எடுக்க குவிந்த ரசிகர்கள்!

 
யோகி பாபு


தமிழகத்தில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3 வது படை வீடு திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி திருக்கோவில்.  தமிழகத்தில் உள்ள கோவில்களில் அதிக வருவாய் கிடைக்கக்கூடிய கோவிலாகும். கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்து முடிந்த திருவிழாவை தொடர்ந்து தற்போதும் முருக பக்தர்கள் பாத யாத்திரையாகவும், காவடி எடுத்தும் வந்து செல்கிறனர்.

யோகி பாபு


அதேபோல பிரபல சினிமா நடிகர்கள் வருகையும் அதிகரித்துள்ளது. நடிகை சமந்தா, கெளதம் கார்த்திக் , மஞ்சிமா மோகன், சந்தானம், என பல்வேறு திரைபிரபலங்கள் வந்து செல்கின்றனர். கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு கூட ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் சாமி தரிசனம் செய்ய பழனி முருகன் கோவில் வந்துள்ளார்.
இதனை தொடர்ந்து நேற்று பழனி முருகன் கோவிலில் திரைப்பட நடிகர் யோகி பாபு  வருகை தந்தார். மலையடிவாரத்தில் இருந்து ரோப் கார் மூலம்  அழைத்துச் செல்லப்பட்டு சாமி தரிசனம் செய்தார்.

யோகி பாபு

மலைக்கோவிலில் 5  இடங்களில் விளக்கு ஏற்றி மனமுருக தரிசனம் செய்தார். யோகி பாபு நடிப்பில் உருவாக உள்ள இரண்டு படங்களுக்கான கதையை சாமி பாதத்தில் வைத்து வழிபாடு செய்தார். யோகிபாபு மலைக் கோயிலுக்கு வருகை தந்ததை அறிந்த பக்தர்கள் பலரும் செல்பி எடுக்க முயற்சித்தனர்.  இதனால் மலைக்கோயிலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதன் பிறகு கோயில் பாதுகாவலர்கள் பத்திரமாக அழைத்துச் சென்று சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்தனர்.  மலையடிவாரத்திற்கு வந்த யோகிபாபு பேட்டரி கார் மூலம் கிரிவலம் சென்றார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?