’அமரன்’ ரொம்ப பிடிச்சிருக்கு... நடிகர் சூர்யா ட்வீட்!

 
அமரன்


 தீபாவளிக்கு வெளியாகி  மக்களை எமோஷனலாக உருக வைத்துள்ள படம் அமரன். வசூல் ரீதியாக இதுவரை ரூ125 கோடி சாதனை படைத்துள்ளது. விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அரசியல் தலைவர்கள் உட்பட பலர் இந்த திரைப்படத்திற்கு நல்ல பாராட்டுக்களை  பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் ரஜினிகாந்த், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, கமல்ஹாசன், முதல்வர் ஸ்டாலின்,  உதயநிதி ஸ்டாலின்,  அண்ணாமலை ஆகியோர் ’அமரன்’ படத்தினை பார்த்துவிட்டு தனது பாராட்டுகளைத் தெரிவித்து இருந்தார்.


அந்த வகையில், நடிகர் சூர்யா தனது குடும்பத்துடன் படத்தினை பார்த்துவிட்டுப் படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்துள்ளார்.  சூர்யா தனியாகத் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்திலும் படம் குறித்துப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ” அமரன் படத்தின் மூலம் மேஜர் முகுந்த் மற்றும் ரெபேக்கா இருவரின்   நிஜவாழ்க்கையைப் பார்த்தேன்.

படம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. படத்தில் எல்லோரும் தங்கள் இதயத்தின் ஒரு பகுதியைக் கொடுத்திருப்பதைக் காண முடிந்தது. படத்தின் வெற்றிக்கு நான் என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.  

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web