பெண் குழந்தையை தத்தெடுத்த நடிகை அபிராமி!!

 
அபிராமி

நேற்று மே 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினம் உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.  நடிகை அபிராமி அன்னையர் தினத்தில் பெண் குழந்தையை தத்தெடுத்துள்ளார்.  இது குறித்து நடிகை அபிராமி வெளியிட்ட செய்திக்குறிப்பில் “அன்னையர் தினத்தை தாயாக கொண்டாடுவதில் மகிழ்ச்சி” அளிப்பதாகவும் நடிகை அபிராமி தெரிவித்துள்ளார். கல்கி என்ற பெண் குழந்தையை தத்தெடுத்தனர். இதை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நடிகை அபிராமி, மகளின் வருகைக்கு பிறகு வாழ்க்கையில் மாற்றம் நிகழ்ந்துள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இந்த அன்னையர் தினத்தை ஒரு தாயாக கொண்டாடுவதில் பாக்கியசாலியாக உணர்வதாகவும் தெரிவித்துள்ளார்.

1995-ல் வெளியான ‘கதாபுருஷன்’ படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமானவர் அபிராமி. அதனைத் தொடர்ந்து, பத்திரம், ஞாங்கல் சந்துஷ்தரனு, மில்லினியம் ஸ்டார்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அதன்பின், 2001-ல் வெளியான ‘வானவில்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து, மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்த், சமுத்திரம், சார்லி சாப்ளின், கார்மேகம், சமஸ்தானம், விருமாண்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், கடந்த 2009-ம் ஆண்டு, புகழ்பெற்ற மலையாள எழுத்தாளரான பவனனின் பேரனான ராகுல் பவனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஒரே பள்ளியில் படித்த இவர்கள் , பதினைந்து ஆண்டுகளாக காதலித்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.அன்னையர் தினத்தை முன்னிட்டு நடிகை அபிராமி பெண் குழந்தையை தத்தெடுத்த மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துள்ளார். அபிராமியும் அவரது கணவர் ராகுலும் கடந்த ஆண்டு ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்தனர், தத்தெடுத்திருக்கும் அந்தச் சின்ன மலருக்கு அவர்கள் ‘கல்கி’ என்று பெயரிட்டுள்ளனர்.

அபிராமி

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அன்புள்ள நண்பர்களே, ராகுலும் நானும் இப்போது கல்கி என்ற பெண் குழந்தைக்கு பெற்றோர் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்! கடந்த ஆண்டு நாங்கள் எங்கள் மகளை தத்தெடுத்தோம், அந்த நிகழ்வு எல்லா வகையிலும் எங்கள் வாழ்க்கையை மாற்றிவிட்டது. இன்று நான் ஒரு புதிய தாயாக அன்னையர் தினத்தை கொண்டாடும் பாக்கியத்தைப் பெற்றுள்ளேன்! நாங்கள் எங்கள் புதிய பாத்திரத்தை சிறப்பாகச் செய்ய உங்கள் ஆசீர்வாதங்களை நானும் எனது குடும்பத்தினரும் கேட்டுக்கொள்கிறோம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web