நடிகை அசின் விவாகரத்து ...!! ரசிகர்கள் அதிர்ச்சி!!

 
அசின்

நடிகை அசின்  எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர். சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த இப்படத்திற்கு பிறகு தமிழில் பிசியான  முன்னணி நடிகையாகி விட்டார் அசின். இதனால் அடுத்தடுத்து தமிழில் பட வாய்ப்புகள் குவிந்தன.அதன்பிறகு விஜய் ஜோடியாக சிவகாசி, சூர்யாவின் கஜினி, விக்ரமுடன் மஜா, ஜீவா இயக்கிய உள்ளம் கேட்குமே  அடுத்தடுத்த ஹிட்படங்கள்.  ஒரே ஆண்டில் வெளியான இந்த  4 படங்களுமே அமோக வெற்றி பெற்றதால் அசுர வளர்ச்சி கண்டார்.    அஜித்துடன்  வரலாறு, விஜய்யுடன்  போக்கிரி, சூர்யாவுடன்  வேல், கமலுடன்  தசாவதாரம் என அனைத்து படங்களும் சக்கை போடு போட்டன.

அசின்

 இதன் பிறகு பாலிவுட்டுக்கு பறந்துவிட்டார் அசின்.  அங்கு சல்மான் கான், ஆமீர் கான் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பான் இந்தியா நடிகை ஆனார். 
அசின்  புகழின் உச்சத்தில் இருந்த போதே 2016ல் ஆண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனம் ராகுல் சர்மாவை திருமணம் செய்துகொண்டார். திருமணம் ஆன பிறகு சினிமாவை விட்டு விலகினார்.   2017ல்   அசின் - ராகுல் சர்மா தம்பதிக்கு அரின் என்ற  பெண் குழந்தை பிறந்தது. 

அசின்
அசின் - ராகுல் சர்மா ஜோடிக்கு திருமணமாகி தற்போது 7 ஆண்டுகள் ஆன நிலையில், அவர்கள் இருவரும் தற்போது விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.   ராகுல் சர்மாவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும்,   அசின் அவரை எச்சரித்தும் ராகுல் சர்மா கேட்காததால் அவரை விவாகரத்து செய்ய முடிவெடுத்து உள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.   தற்போது அசின் தனது குழந்தையுடன் தனது பெற்றோர் வீட்டில் தனியாக வசித்து வருவதாக கூறப்படுகிறது.இத்தகவல் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web