நடிகை சித்ராவின் தந்தை இறந்த காரணம் இதுதான்... மனைவி கண்ணீர் பேட்டி!!
இன்று காலை பிரபல சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை திருவான்மியூரில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரின் மனைவி பேட்டியளித்துள்ளார்.
காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த காமராஜ் கடந்த 2019ம் ஆண்டு காவல் உதவி ஓய்வு பெற்றவர். திருவான்மியூரில் இருக்கும் ராஜாஜி நகர் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
கடந்த 2020ல் பூந்தமல்லி அருகே தனியாருக்கு சொந்தமான ஹோட்டல் அறையில் நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்த தற்கொலை சம்பவத்தில் சித்ராவின் கணவர் ஹேம்நாத் தான் காரணம் என புகார் கூறப்பட்ட நிலையில், அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வந்தனர்.
இந்த வழக்கினை விசாரித்த திருவள்ளூர் மகிளா விரைவு நீதிமன்றம் ஹேம்நாத் நிரபராதி என கூறி அவரை வழக்கில் இருந்து விடுவித்தது. இதை எதிர்த்து காமராஜ் மேல்முறையீடு செய்திருக்கும் வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் காமராஜ் தற்கொலை குறித்து பேசிய அவரது மனைவி, “சித்ரா வழக்கு தீர்ப்பு வந்ததில் இருந்து எனது கணவர் மன உளைச்சலில் இருந்தார். சாப்பிடவே மாட்டார். சாப்பிடாமல் இருந்து இப்படி செய்து விட்டார். என் வீட்டை சுடுகாடாக்கி விட்டார்கள். மன உளைச்சலில் நாங்கள் ஒவ்வொரு நாளும் செத்துக் கொண்டிருக்கிறோம். தீர்ப்பை மிகவும் எதிர்பார்த்து இருந்தோம்” என்று கண்ணீருடன் கூறியுள்ளார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரகாரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!