அதிமுக வேட்பாளர் நேர்காணலில் நடிகை கவுதமி பங்கேற்பு!
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தயாரிப்புகளை தீவிரப்படுத்தி வருகின்றன. அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக இணைந்துள்ள நிலையில், மேலும் சில கட்சிகள் சேரும் என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். இதனையடுத்து அதிமுகவில் வேட்பாளர் தேர்வு பணிகள் வேகமெடுத்துள்ளன.

கடந்த டிசம்பர் 15ம் தேதி தொடங்கிய விருப்ப மனு பெறும் பணியில் மொத்தம் 10,175 பேர் விண்ணப்பித்தனர். இதில் 7,988 பேர் தாங்கள் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தனர். மேலும் 2,187 மனுக்களில் எடப்பாடி பழனிசாமி தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும் என ஆதரவாளர்கள் விருப்பம் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வேட்பாளர் நேர்காணல் நடைபெற்று வருகிறது. இன்று விருதுநகர், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி புறநகர் வடக்கு மாவட்டங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களிடம் நேர்காணல் நடத்தப்படுகிறது. இதில் நடிகையும், கட்சி நிர்வாகியுமான கவுதமி கலந்து கொள்ள வந்தது கவனம் பெற்றுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
