2வது குழந்தைக்கு தாயான பிரபல நடிகை இலியானா... குவியும் வாழ்த்துகள்!

 
இலியானா


தமிழ் திரையுலகில் நடிகர் விஜய்யுடன் நண்பன் படத்தில் நடித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவர்.  இவர் 2023ல் அமெரிக்க நடிகர் மைகேல் டோலனை  திருமணம் செய்தார்.  அதே ஆண்டு ஆகஸ்டில் இவர்களுக்கு முதல் குழந்தை பிறந்தது.
தற்போது  தனக்கு 2 வது குழந்தை  ஜூன் 19ம் தேதி பிறந்ததாக தனது இன்ஸ்டாவில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அந்தப் பதிவில் குழந்தையின் புகைப்படத்தைப் பதிவிட்டு, "எங்களின் இதயம் நிறைந்து விட்டது" எனக் கூறியுள்ளார். மேலும், அந்தக் குழந்தையின் பெயர் கீனு ரஃபி டோலன் என பதிவிட்டுள்ளார்.  


நடிகை பிரியங்கா சோப்ரா  இலியானாவுக்கு வாழ்த்துகளைக் கூறியுள்ளார். பிரியங்கா சோப்ராவும் இலியானாவும் 2012ல் வெளியான பர்பி திரைப்படத்தில் இணைந்து நடித்தவர்கள். 2024ல்  தனது கர்ப்பத்தை அறிவித்த நடிகை இலியானா அதன்பிறகு பெரும்பாலும் புகைப்படங்களை பதிவிடாமலே இருந்தார்.

இலியானா

கடந்த மே மாதத்தில் இன்ஸ்டாவில்  கேள்வி பதில் செஷனில்  "அன்பு என்பது மரியாதை, மகிழ்ச்சியைப் போலவே சம்பாதிக்க வேண்டும் எனக் குழந்தைக்குச் சொல்லித்தர வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது