வாயில் சிகரெட்... சர்ச்சையில் சிக்கிய நடிகை ஜோதிகா!

தமிழ் திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்த நடிகைகளில் ஒருவர் நடிகை ஜோதிகா. இவர் தற்போது பாலிவுட் சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார். கடைசியாக இவர் தமிழில் உடன்பிறப்பே எனும் படத்தில் நடித்திருந்தார். இப்படம் நேரடியாக ஓடிடி-யில் ரிலீஸ் செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து மலையாளத்தில் காதல் தி கோர் படத்தில் மம்மூட்டி உடன் இணைந்து நடித்திருந்தார். இதன்பின் தற்போது பாலிவுட் பக்கம் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.
கடந்த ஆண்டு சைத்தான் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய திரைப்படங்கள் இந்தியில் வெளிவந்திருந்த நிலையில், இந்த ஆண்டு Dabba Cartel எனும் வெப் தொடர் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளிவந்துள்ள இந்த வெப் தொடரில் பல முன்னணி நடிகைகள் நடித்துள்ளனர். அதில் ஒருவராக முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடிகை ஜோதிகா நடித்து வருகிறார். இந்நிலையில், Dabba Cartel வெப் தொடரில் சிகரெட் பிடிக்கும் காட்சியில் நடிகை ஜோதிகா நடித்துள்ளார். இது குறித்த புகைப்படம் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!