நடிகை காருண்யாவின் தங்கை ஆன்லைன் சூதாட்டத்தில்ரூ.25 லட்சம் இழப்பு... குற்றப்பிரிவு போலீசார் முன் நேரில் ஆஜர்!
தங்கையின் சூதாட்டப் பழக்கத்தால் ஏற்பட்ட கடன் நெருக்கடி மற்றும் மிரட்டல்கள் குறித்துப் பிரபல கன்னட நடிகை காருண்யா ராம் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றவர். ‘பெட்ரோமாக்ஸ்’ உள்ளிட்ட பல கன்னடத் திரைப்படங்களில் நடித்துள்ளார். காருண்யா ராமின் தங்கை சம்ருத்தி ராம், ஆன்லைன் சூதாட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார். இதில் சுமார் ரூ.25 லட்சம் வரை பணத்தை இழந்ததுடன், அதனைச் ஈடுகட்டப் பல்வேறு நபர்களிடம் பெரும் தொகையைக் கடனாகப் பெற்றுள்ளார்.

கடந்த 2023ம் ஆண்டே, காருண்யா ராமுக்குச் சொந்தமான நகை மற்றும் பணத்தைத் திருடிக்கொண்டு சம்ருத்தி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இது குறித்து அப்போதே ராஜராஜேஸ்வரி நகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
சம்ருத்திக்குக் கடன் கொடுத்த நபர்கள், அவரது அக்காவான காருண்யா ராமைத் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளனர். சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவது, வாட்ஸ்அப் மூலம் ஆபாசமாகத் திட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டதால், கடந்த ஜனவரி 16-ஆம் தேதி காருண்யா ராம் பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு (CCB) போலீசில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் அனுப்பிய நோட்டீஸை ஏற்று, காருண்யா ராம் நேற்று விசாரணைக்கு ஆஜரானார். தங்கை பணத்தை இழந்த விபரங்கள் மற்றும் கடன் கொடுத்தவர்கள் தன்னை எப்படியெல்லாம் துன்புறுத்தினார்கள் என்பது குறித்த ஆதாரங்களைச் சமர்ப்பித்தார். விசாரணையை முடித்துவிட்டு வெளியே வந்த அவர், செய்தியாளர்களின் கேள்விகளால் ஆவேசமடைந்து, "உங்களிடம் பேசுவதால் எனக்கு எந்தப் பயனும் இல்லை" எனக் கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
