நடிகை கஸ்தூரி சர்ச்சை ட்வீட்!! திருட்டு ரயில் ஏறி வந்தாலும் அரியணையில் ஏற்றி அழகு பார்ப்போம்!!

 
கஸ்தூரி

தமிழகம் முழுவதும் பெட்டிக்கடைகள் தொடங்கி மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் வரை அனைத்து இடங்களிலும் வடமாநிலத்தொழிலாளர்கள் தான். உணவு, தங்குமிடம் கொடுத்து , சொற்ப சம்பளத்தில் பணிபுரிய ஏஜெண்ட்கள் மூலம் இவர்கள் சப்ளை செய்யப்படுகிறார்கள். சமீபகாலமாக இவர்கள் தாக்கப்படுவதாகவும், அவர்களின் பாதுகாப்பிற்கு சவால் இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. அதே போல் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் வடமாநில தொழிலாளர்கள் அதிகம் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.  இவர்கள்  தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வருகிறது


 

இந்த சர்ச்சை வெடித்து பீகார் சட்டசபை வரை  சென்று விட்டது. நேற்று அம்மாநில சட்டசபையில் எதிர்க்கட்சிகள்  தமிழகத்துக்கு அனைத்து கட்சி குழுவை அனுப்பி வடமாநில தொழிலாளர்களின்பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கையை விடுத்துள்ளனர்.  இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் பீகார் முதல்வரிடம் இது குறித்து பேசியுள்ளார். அதில் அனைத்து மாநில தொழிலாளர்களும் எங்கள் தொழிலாளர்களே. சகோதரத்துவம் கடைப்பிடிக்கப்படும். அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். வடமாநில தொழிலாளர்களுக்காக அறிவிப்புக்கள் ஹிந்தியில் வெளியிடப்பட்டுள்ளன.  அதில்  வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கூறப்படுவது வதந்தி, அதை நம்பவேண்டாம் எனத் தெரிவித்துள்ளனர்.  மேலும், பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமாரையும், அம்மாநில காவல்துறையியும் டேக் செய்து, பீகார் மாநில தொழிலாளர்கள் மட்டுமல்லாமல் வட மாநில தொழிலாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவித்தது.  

கஸ்தூரி

ஆனால் வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல ரயில் நிலையங்களில் சாரை சாரையாக கிளம்பி வருவதாகவும் தகவல்கள் பரவுகின்றன. இந்நிலையில் நடிகை கஸ்தூரி இது குறித்து சர்ச்சை ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் வடநாட்டவர்களை தமிழர்கள் தாக்குகிறார்கள் என்பதெல்லாம் மிகை. இது வந்தோரை வாழவைக்கும் தமிழ்நாடு. தெலுங்கர், வடுகர், மலையாளி, மைசூர் என யாராயிருந்தாலும், திருட்டு ரெயிலே ஏறி வந்தாலும் அரியணையில் ஏற்றி அழகு பார்ப்போமேயன்றி அடித்து துரத்துவதில்லை'' என்று கஸ்தூரி கூறியுள்ளார். கஸ்தூரியின் இந்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

From around the web