மூக்குத்தி அம்மன் 2 படத்துக்காக நடிகை நயன்தாரா விரதம்.. தயாரிப்பாளர் நெகிழ்ச்சி!

 
நயன்

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடிகை நயன் தாரா  நடித்த திரைப்படம் மூக்குத்தி அம்மன்.இந்தப் படத்தில் நயன் தாரா அம்மனாக  நடித்தார். அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. தற்போது அதன் இரண்டாம் பாகத்தை வேல்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க சுந்தர்.சி இயக்குகிறார். இந்தப் படத்திலும்  நயன்தாராவே அம்மனாக நடிக்கிறார். இந்த திரைப்படம் முழுவதும் நயன்தாராவை மையப்படுத்தி உருவாகும் இந்த படம் 100 கோடி பட்ஜெட்டில் உருவாகிறது.

நயன்

தமிழ் சினிமாவில் பெண் மையக்கதை கொண்ட படம் 100 கோடி பட்ஜெட்டில் உருவாவது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று மூக்குத்தி அம்மன் 2 படத்திற்கான பூஜை சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது. இதற்காக  நிஜமான கோவில் போன்றே செட் அமைக்கப்பட்டு பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இந்த படபூஜை நிகழ்ச்சிக்கு இயக்குனர் சுந்தர்.சி. தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், மற்றும் சக நடிகர்கள் என பலரும் வந்துவிட்டனர்.

நயன்

இந்நிலையில் நயன்தாரா இன்னும் நிகழ்ச்சிக்கு வரவில்லை என சலசலப்பு எழுந்தது.   இதுகுறித்து பேசிய தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் “மூக்குத்தி அம்மன் முதல் பாகம் தயாரானபோதே நயன்தாரா ஒரு மாதம் விரதம் இருந்து அதன் பிறகு தான் நடித்தார். தற்போது இரண்டாம் பாகத்திற்காக கடந்த ஒரு மாத காலமாக அவரது குடும்பமே விரதத்தில் இருக்கிறது.   நயன்தாரா தற்போது வந்துக் கொண்டிருக்கிறார். சற்று தாமதமாகலாம்” என கூறினார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web