நடிகை பிரகதி பவர் லிஃப்டிங்கில் இந்தியாவுக்கு 4 சர்வதேசப் பதக்கங்களை வென்று சாதனை!
சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமான நடிகை பிரகதி, தற்போது தனது நடிப்பைக் குறைத்துவிட்டுப் பளு தூக்குதல் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவர் தனது 49-வது வயதில், சர்வதேசப் போட்டிகளில் இந்தியாவுக்காக ஒரே நேரத்தில் 4 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.
துருக்கியில் நடைபெற்ற ஆசிய ஓபன் மற்றும் மாஸ்டர்ஸ் பவர் லிஃப்டிங் சாம்பியன்ஷிப் 2025 போட்டியில் பங்கேற்ற நடிகை பிரகதி, இந்தியாவுக்காகப் பின்வரும் 4 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார்:
டெட் லிஃப்ட் (Dead Lift): தங்கப் பதக்கம். பெஞ்ச் பிரஸ் & ஸ்குவாட் லிஃப்டிங் (Bench Press & Squat Lifting): இரண்டு வெள்ளிப் பதக்கங்கள். ஒட்டுமொத்தப் பிரிவு (Overall): வெள்ளிப் பதக்கம் ஆகியவற்றை வென்றுள்ளார்.

மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் ஏற்கனவே பல பதக்கங்களை வென்றுள்ள பிரகதி, தற்போது சர்வதேச அளவில் பதக்கம் வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளார். அவரது இந்தச் சாதனைக்காக, ரசிகர்களும் திரைப்பட பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருவதால், பிரகதி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
