காதலரைக் கரம் பிடித்தார் நடிகை ரம்யா பாண்டியன் ... கங்கை நதிக்கரையில் கோலாகலம்.. நவ.15ல் சென்னையில் வரவேற்பு!
இன்று காலை ரிஷிகேஷில் கங்கை நதிக்கரையில் அமைந்திருக்கும் கோயில் ஒன்றில் நடிகை ரம்யா பாண்டியன் தனது நீண்ட நாள் காதலரான யோகா மாஸ்டர் லோவெல் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். நெருங்கிய நண்பர்களும், உறவினர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இதனைத் தொடர்ந்து சென்னையில் வரும் நவம்பர் 15ம் தேதி வரவேற்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
நடிகரும் பிரபல தயாரிப்பாளருமான அருண் பாண்டியனின் உறவினரான நடிகை ரம்யா பாண்டியன், ராஜூ முருகன் இயக்கிய ஜோக்கர் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

சினிமாவிலும், மாடலிங் துறையிலும் பெரிய ஆளாக வேண்டும் என ஆசைப்பட்ட ரம்யா பாண்டியனுக்கு அதன் பின்னர் பெரியளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தனது வீட்டின் மொட்டை மாடியில் பாவாடை தாவணி அணிந்து இடுப்பழகைக் காட்டி ரம்யா பாண்டியன் வெளியிட்ட போட்டோஷூட் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டார் ரம்யா பாண்டியன்.
ஆனால், அதன் பின்னரும் பெரியளவில் திரைத்துறையில் வாய்ப்புகள் வரவில்லை. இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடையே அவ்வப்போது வைரலாக்கி வந்தார்.
அதன் பின்னர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். ஆனால் ரம்யா பாண்டியனின் நடவடிக்கை ரசிகர்களுக்கு பிடிக்காமல் அதிகளவில் ட்ரோல் செய்யப்பட்ட நிலையில், பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். பிக்பாஸ் புகழ் வெளிச்சமும் சினிமாவில் வாய்ப்புகளைக் குவிக்காத நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்நிலையில் இன்று காலை ரிஷிகேஷில் கங்கை நதிக்கரையோரம் உள்ள கோவில் ஒன்றில் லவால் தவான் என்பவரை திருமணம் செய்துள்ளார். தவான் யோகா பயிற்சி கொடுப்பவர். நடிகர், தயாரிப்பாளர் அருண் பாண்டியனின் உறவினரான நடிகை ரம்யா பாண்டியனுக்கு திரைத்துறையைச் சேர்ந்த பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!
