நடிகை சமந்தாவுக்கு ரசிகர்கள் கோவில் திறப்பு.... வேற என்னத்த சொல்றது?!

 
samantha


இந்திய திரையுலகில் முண்ணனி நடிகைகளில் ஒருவராக தம்மை நிலைநிறுத்திக் கொண்டவர் நடிகை சமந்தா. இவருக்கு தமிழில் மட்டுமல்ல உலகம் முழுவதும் ரசிகர்கள் ஏராளம். அதிலும்  இந்திய ரசிகர்கள் மிகவும் ரசனை கொண்டவர்கள்.  நடிகைகளுக்கு கோயில் கட்டும் பழக்கத்தை முதலில் தொடங்கியது நம்ம இந்தியர்கள் தான்.  ஏற்கனவே குஷ்பூ, நிதி அகர்வாலுக்கு  கோவில் கட்டியுள்ளனர்.  அந்த வரிசையில் தற்போது சமந்தாவுக்கும் கோவில் கட்டி வருகின்றனர். 

samantha
ஆந்திராவின் குண்டூர் அருகே பாட்பலா மாவட்டம் அலைபாடு கிராமத்தில் வசித்து வரும்  சந்தீப்  என்பவர் நடிகை சமந்தாவின் தீவிர ரசிகர் .இவர் நடிகை சமந்தாவுக்காக கட்டி வரும் கோவிலை நாளை திறக்க இருப்பதாக அறிவித்துள்ளார். 

சமந்தா
இது குறித்து அவரிடம் கேட்கப்பட்ட போது, நடிகை சமந்தா நடிப்பில் மட்டுமல்ல தொண்டு செய்வதிலும் மிகவும் கவர்ந்துள்ளார். சமந்தா பிரதிக்ஷா அறக்கட்டளை மூலம் பல சேவைகளை செய்து வருகிறது.இதனை அறிந்ததும் சமந்தா மீது மேலும் மதிப்பும், மரியாதையும்  அதிகமானது. இதனால் அவருக்கு கோவில் கட்ட நான் தீர்மானித்தேன். இதற்கு எங்கள் வீட்டிலேயே ஒரு பகுதியை ஒதுக்கி கோயில் கட்டி வருகிறேன். அதன் இறுதி கட்டப்பணியில் நடைபெற்று வரும் நிலையில்  ஏப்ரல் 28 வெள்ளிக்கிழமை நாளை திறப்பு விழா நடைபெறும்” என அறிவித்துள்ளார். தங்களுக்குப் பிடித்தமான நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு தென்னக  ரசிகர்கள்  குஷ்பு, நயன்தாரா, ஹன்சிகா, நமீதா, ஹனிரோஸ் போன்ற நடிகைகளுக்கு ரசிகர்கள் கோயில் கட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!