நடிகை சமந்தா தயாரிப்பில் முதல் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

 
சமந்தா

 

 

நடிகை சமந்தா "சுபம்" என்ற பெயரில் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார். 

null


தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, சமீபத்தில் பாலிவுட்டில் வெளியான சிட்டாடல் தொடர் மூலமாக மீண்டும் ஹிட்டடித்திருக்கிறார். தற்போது மேலும் ஒரு வெப் தொடரில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை சமந்தா சமீபத்தில் சொந்தமாக ட்ரலாலா மூவிங் பிக்சர்ஸ் என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி, இந்நிறுவனத்தின் கீழ் "சுபம்" என்ற படத்தை தயாரித்திருக்கிறார். 

பிரவீன் காந்த்ரேகுலா இயக்கும் இந்த படத்தில் பல புது முகங்கள் நடித்திருக்கின்றனர். சமந்தா தயாரித்த வெளியாகும் முதல் படம் என்பதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

சமந்தா

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்து, படம் வரும் மே 9ம் 9ம் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?