₹150 கோடி பிட்காயின் மோசடி - நடிகை ஷில்பா ஷெட்டி கணவர் ராஜ் குந்த்ரா நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவு!
'கெயின் பிட்காயின்' என்ற பெயரில் நடத்தப்பட்ட சுமார் 6,600 கோடி ரூபாய் மதிப்பிலான மெகா மோசடி வழக்கில், ராஜ் குந்த்ராவுக்குத் தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை ஆதாரங்களைத் திரட்டியுள்ளது.
இந்த மோசடியின் மூளையாகச் செயல்பட்ட அமித் பரத்வாஜிடம் இருந்து, உக்ரைனில் பிட்காயின் சுரங்கம் (Mining) அமைப்பதற்காக ராஜ் குந்த்ரா 285 பிட்காயின்களைப் பெற்றுள்ளார். அந்த 285 பிட்காயின்களின் இன்றைய சர்வதேச மதிப்பு சுமார் ரூ.150 கோடி ஆகும்.

ஒப்பந்தம் தோல்வியடைந்தும், அந்த பிட்காயின்களை ராஜ் குந்த்ரா திருப்பித் தராமல் தன் வசமே வைத்துள்ளார். தான் ஒரு 'மத்தியஸ்தர்' (Consultant) மட்டுமே என்று அவர் கூறியதை ஏற்க மறுத்த அமலாக்கத்துறை, அவர் ஆதாரங்களை மறைக்க முயன்றதாகக் குற்றம் சாட்டியுள்ளது.

அமலாக்கத்துறை தாக்கல் செய்த 4-வது கூடுதல் குற்றப்பத்திரிகையைப் பரிசீலித்த மும்பை சிறப்பு நீதிமன்றம்: ராஜ் குந்த்ரா மற்றும் துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜேஷ் சதிஜா ஆகிய இருவருக்கும் சம்மன் அனுப்பியுள்ளது. இருவரும் வரும் ஜனவரி 19-ம் தேதி (2026) நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
