நடிகை ஷோபனா, நல்லி குப்புசாமிக்கு பத்ம பூஷன் விருது!
2025ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் ஜனவரி 25 ம் தேதி மத்திய அரசால் அறிவிக்கப்பட்டன. அந்த வகையில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது. அதன்படி பிரபல நடிகரும், கார் பந்தய வீரருமான அஜித்குமார், புகழ்பெற்ற நடிகையும், பரதநாட்டியக் கலைஞருமான ஷோபனா சந்திரகுமார், முன்னணி தொழிலதிபர் நல்லி குப்புசாமி ஆகியோருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டிருந்தது.

பத்ம பூஷண் மட்டுமின்றி, தமிழகத்தைச் சேர்ந்த கலைஞர் வேலு ஆசான் மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் உட்பட சிலருக்கு பத்ம ஸ்ரீ விருதுகளும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குடியரசு தலைவர் மாளிகையில் நேற்று மே 27ம் தேதி நடைபெற்ற சிறப்பு விழாவில், தேர்ந்தெடுக்கப்பட்ட 65 பேருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பத்ம விருதுகளை வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்வில், தமிழகத்தைச் சேர்ந்த நடிகை ஷோபனா, குடியரசுத் தலைவரிடம் இருந்து பத்ம பூஷண் விருதைப் பெற்றுக் கொண்டனர். அதேபோல், தொழிலதிபர் நல்லி குப்புசாமியும் பத்ம பூஷண் விருதை ஏற்றுக்கொண்டார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
