மன்னிப்பு கேட்டார் நடிகை சிவஜோதியை... திருப்பதியில் தரிசனத்திற்கு நிரந்தர தடை விதித்து அறிவிப்பு!

 
சிவஜோதி

பிரபல டி.வி. தொகுப்பாளினியும் நடிகையுமான சிவஜோதி, திருப்பதி ஏழுமலையான் கோவில் நிர்வாகம் குறித்துச் சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பிய காரணத்தால், அவரை வருங்காலத்தில் தரிசனத்துக்கு அனுமதிக்க முடியாது என்று திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர். இதனால் ஆந்திர மாநிலத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினியாக இருக்கும் சிவஜோதி, சமீபத்தில் தனது சகோதரர் சோனுவுடன் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வந்தார். அப்போது, ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள விரைவுத் தரிசன டிக்கெட்டை வாங்கியும், தரிசனத்திற்காக நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க நேரிட்டதாகக் கூறப்படுகிறது.

திருப்பதி

இதைக் கண்டிக்கும் விதமாக, சிவஜோதியும் அவரது சகோதரரும் ஓர் விடியோவை பதிவு செய்தனர். அதில், "ரூ.10 ஆயிரம் கட்டணம் செலுத்தியும் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியிருந்தது. பிரசாதம் வாங்குவதற்காகப் பிச்சைக்காரர்களைப் போல் நீண்ட நேரம் காத்திருந்தோம்" என்று அவதூறான கருத்துகளைப் பதிவிட்டு, அதனைச் சமூக வலைதளங்களான 'வாட்ஸ்அப்' மற்றும் 'இன்ஸ்டாகிராம்' ஆகியவற்றில் பரப்பினர்.

இந்த விடியோவானது சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவியதால், ஆந்திராவில் பெரும் பரபரப்பையும், திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தில் சலசலப்பையும் ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, தேவஸ்தான அதிகாரிகள் உடனடியாகச் சிவஜோதியின் இந்தச் செயலைக் கண்டித்தனர்.

திருப்பதி

அடுத்த கட்டமாக, சிவஜோதியின் ஆதார் அட்டையைத் திருப்பதி தேவஸ்தானத்தின் சேவைகளில் பதிவு செய்வதைத் தவிர்க்கும் விதமாக முடக்கம் செய்தனர். மேலும், இனி வரும் காலங்களில் நடிகை சிவஜோதியை ஏழுமலையானைத் தரிசிக்க அனுமதிக்க மாட்டோம் என்றும் தேவஸ்தான அதிகாரிகள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

தேவஸ்தானத்தின் இந்த அதிரடி நடவடிக்கைக்குப் பிறகு, நடிகை சிவஜோதி மற்றொரு விடியோவை வெளியிட்டுள்ளார். அதில், "தெரிந்தோ தெரியாமலோ என் வாயில் இருந்து சில வார்த்தைகள் தவறாக வந்து விட்டன. ஏழுமலையானைக் குலதெய்வமாகக் கருதுகிறேன். என் வயிற்றில் வளரும் குழந்தையைக்கூட ஏழுமலையானாகவே கருதுகிறேன். என் மீதான தவறுக்கு மன்னித்து விடுங்கள்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!