நடிகை சிவகார்த்திகேயேன் தத்தெடுத்த சிங்கம், சிறுத்தை, வெள்ளைப்புலி அடுத்தடுத்து உயிரிழப்பு.. வண்டலூரில் சோகம்!
தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய உயிரியல் பூங்காவான வண்டலூரில், வயது மூப்பு காரணமாக முக்கிய வனவிலங்குகள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த 23 வயதான 'அனு' என்ற பெண் வெள்ளைப்புலி, கடந்த சில நாட்களாக வயது மூப்பு காரணமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தது. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் உயிரிழந்தது. இதேபோல், 22 வயதான 'ரமேஷ்' என்ற ஆண் சிறுத்தையும் வயது மூப்பு காரணமாக நேற்று அதிகாலை 3.30 மணியளவில் உயிரிழந்தது.

கடந்த 4 நாட்களுக்கு முன்புதான் ஒரு பெண் சிங்கம் வயது மூப்பு காரணமாகப் பலியானது. ஒரே வாரத்தில் பூங்காவின் மூன்று முக்கியக் கவர்ச்சிகரமான விலங்குகள் உயிரிழந்திருப்பது சுற்றுலாப் பயணிகளையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

தற்போது உயிரிழந்த வெள்ளைப்புலி 'அனு'வை, நடிகர் சிவகார்த்திகேயன் கடந்த 2018-ம் ஆண்டு ஆறு மாத காலத்திற்குத் தத்தெடுத்து அதற்கான பராமரிப்புச் செலவுகளை ஏற்றிருந்தார். சிவகார்த்திகேயன் தொடர்ந்து வண்டலூர் பூங்காவின் விலங்குகள் தத்தெடுப்புத் திட்டத்தில் ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் 'பிரக்கருதி' என்ற பெண் யானையை 6 மாத காலத்திற்கு அவர் தத்தெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
