பரபரப்பு புகார்... நடிகை சௌந்தர்யாவின் மரணம் விபத்தல்ல கொலை !

தென்னிந்தியாவின் பிரபல நடிகை சௌந்தர்யா. இவர் 2004ல் ஏப்ரல் 17ம் தேதி விமானவிபத்தில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த மரணம் விபத்தல்ல கொலை என்று ஆந்திராவைச் சேர்ந்த சிட்டிமல்லு என்பவர் பரபரப்பு புகார் அழைத்துள்ளார். சௌந்தர்யா இறக்கும் போது அவர் கர்ப்பமாக இருந்ததாக தெரிகிறது. விமான விபத்தில் உயிரிழந்த அவருடைய உடல் கிடைக்கவில்லை.
நடிகை சவுந்தர்யா 1972ல் கர்நாடகா மாநிலம் கோலாரில் பிறந்தார். இவரது இயற்பெயர் சௌமியா சத்தியநாராயணா. இவர் கன்னடம், தமிழ், இந்தி, மலையாளம் மொழிகளில் நடித்துள்ளார். இவர் நந்தி விருது, கர்நாடகா அரசின் இரு மாநில விருதுகள், 6 பிலிம்பேர் விருதுகளையும் பெற்றிருந்தார்.
தமிழில் பொன்னுமணி, படையப்பா, அருணாசலம், சொக்க தங்கம், தவசி உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இந்தியில் சூர்யவன்ஷம் என்ற படத்தில் அமிதாப் பச்சனுடன் நடித்திருந்தார். இவரது கடைசி படம் ஆப்தமித்ரா. விஷ்ணுவர்தன், ரமேஷ் அரவிந்துடன் நடித்திருந்தார்.
இந்நிலையில் ஆந்திர மாநிலம் கம்மம் மாவட்டத்தில் வசித்து வருபவர் சிட்டிமல்லு. இவர் தனது புகாரில், “நடிகை சவுந்தர்யாவின் மரணம் விபத்தால் நடந்தது இல்லை, அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். சவுந்தர்யாவுக்கு ஜல்பள்ளி கிராமத்தில் 6 ஏக்கர் நிலம் இருக்கிறது. அந்த நிலத்தை வாங்க மோகன் பாபு முயற்சித்திருக்கிறார்.
ஆனால் அந்த நிலத்தை விற்பனை செய்ய சவுந்தர்யாவின் சகோதரருக்கு விருப்பம் இல்லை. சவுந்தர்யாவின் மரணத்திற்கு பிறகும் அந்த நிலத்தை விற்பனை செய்யுமாறு அமர்நாத்திற்கு அழுத்தம் கொடுத்த மோகன் பாபு அந்த நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளார். நிலத்தை மீட்க கோரிக்கை எனவே இந்த நிலத்தை மீட்டு ஆதரவற்றோர், ராணுவத்தினர், போலீஸார் ஆகியோரின் நலனுக்கு வழங்க வேண்டும் என தனது புகாரில் சிட்டிமல்லு குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த 6 ஏக்கர் நிலத்திற்காக மோகன்பாபுவுக்கும் மகன் மஞ்சு மனோஜுக்கும் இடையே பெரிய தகராறு ஏற்பட்டது. இந்த நில அபகரிப்பு விவகாரத்தில் மோகன் பாபுவை அழைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த புகாரால் தனக்கு மோகன் பாபு தரப்பிடம் இருந்து மிரட்டல்கள் வரலாம் என்பதால் தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!