அருப்புக்கோட்டை கோயிலுக்கு நடிகை த்ரிஷா இயந்திர யானை வழங்கினார்!

 
கஜா

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள கோயிலுக்கு நடிகை த்ரிஷா ‘கஜா’ என்ற இயந்திர யானையை வழங்கியுள்ளார்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அஷ்டலிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் மற்றும் அஷ்டபுஜ ஆதிசேஷ வராகி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் கும்பாபிஷேக விழா வரும் ஜூலை 2ம் தேதி நடைபெற உள்ளது. 

இந்நிலையில், இக்கோயிலுக்கு இயந்திர யானை ஒன்றை நடிகை த்ரிஷா அன்பளிப்பாக வழங்கினர். இந்த இயந்திர யானைக்கு ‘கஜா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

கஜா

நிஜ யானையைப் போலவே தோற்றமளிக்கும் இந்த இயந்திர யானை, தனது பெரிய காதுகளையும், தும்பிக்கை, வால் போன்றவற்றையும் ஆட்டுகிறது. தும்பிக்கையால் தண்ணீர் பீய்ச்சி அடிப்பதும், ஆசிர்வாதம் செய்வதும் கூடுதல் சிறப்பாகும். கோயிலுக்கு இயந்திர யானையை வழங்கும் விழா அருப்புக்கோட்டையில் நேற்று நடைபெற்றது. 

இது குறித்து பீப்புல் ஃபார் கேட்டில் இன் இந்தியா குழுவினர் கூறுகையில், “2023-ம் ஆண்டு இரிஞ்சாடப்பில்லி ராமன் என்று பெயரிடப்பட்ட உலகின் முதல் இயந்திர யானையை கேரளாவில் உள்ள கோயிலுக்கு வழங்கினோம். தற்போது தமிழகத்தில் முதன்முறையாக அருப்புக்கோட்டையில் இயந்திர யானை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

கஜா

கேரளாவில் தயாரிக்கப்பட்ட இந்த யானையின் விலை ரூ.6 லட்சம். கோயில் சடங்குகளில் பங்கேற்க யானை தயாராக உள்ளது. இது உயிருள்ள நிஜ யானைகளைப் பயன்படுத்தும் பாரம்பரிய முறைக்குப் பதிலாக, மனிதாபிமான மாற்றாகத் திகழும். தமிழகத்தில் 29 கோயில்களில் யானைகள் உள்ளன. பல இடங்களில் அவை துன்புறுத்தப்படுவதாக கூறப்படுகிறது. 

திருச்செந்தூரில் கூட 2 பாகன்களை யானை கொன்றுள்ளது. இது போன்ற நிகழ்வுகளைத் தடுக்கவும், விலங்குகள் துன்புறுத்தப்படுவதைத் தடுக்கவும் இந்த புதிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது” என்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது